Friday, 6 September 2024

 
AIBSNLPWA AMBATTUR
அம்பத்தூர் கிளையின் 4 வது கிளை மாநாடு திருமுல்லைவாயில் பொன்னி  மஹாலில் 03-09-2024 காலை 11.00 மணியளவி்ல் தொடங்கியது. கிளை செயலாளர் தோழர்.B.தியாகராஜன் அனைவரையும் வரவேற்று  பேசினார்.கிளையின் தலைவர் தோழர் A.இஸ்மாயில் தலைமை ஏற்று மாநாட்டினை நடத்திக் கொடுத்தார்  நிகழ்ச்சி நிரல்  ஒப்புதல் பெறப்பட்டு , இறந்தவர்களுக்கு   1 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது ..
மாநில செயலாளர் தோழர் S .தங்கராஜ் துவக்க உரையாற்றி மாநாட்டை துவக்கி  வைத்தார். கிளை செயலாளர் தோழர் B.தியாகராஜன் வாசித்த ஆண்டறிக்கையையும், கிளை பொருளாளர் C. ராஜமோகன் சமர்பித்த இரண்டாண்டுக்கான வரவு செலவு கணக்கும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதனை  தொடர்ந்து நமது சங்கத்தின் ஸ்தாபகரும் முன்னாள்  அ.இ.து தலைவருமான தோழர் G.நடராஜனும், அ.இ.து.தலைவருமான தோழர் M.அரங்கநாதனும் சிறப்புறை ஆற்றினார்கள்.
நமது மாநில சங்க தலைவர் தோழர் M.முனுசாமி அவர்கள் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்து  வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் தேர்தலில்
தோழர் A.இஸ்மாயில் தலைவராகவும்,
தோழர் B. தியாகராஜனை செயலாளராகவும்,
தோழர் C.ராஜமோகன்  பொருளாளராகவும் 
கொண்ட 30 நிர்வாகிகள் அடங்கிய பட்டியலை தோழர் R.ரவிசங்கர் முன்மொழிய. தோழர் A.ஜெயந்தி வழி மொழிய மாநாடு ஒருமனதாக ஏற்று கொண்டது.(நிர்வாகிகள் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்) இதனை தொடர்ந்து தோழர்கள் V.ரத்னா  அ.இ.உ.பொ.செயலாளர்,M. கோவிந்தராஜ், மா.து.தலைவர்  M.கண்ணப்பன் மா.பொருளாளர்,     R. குணசேகரன், மா.உ.செயலாளர்  Pசுப்பரமணியன் மா.உ. செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினார்கள். மாநாட்டிற்கு தோழர். L.பிரபாகரன். மா.அ.செயலாளர், தோழர். A.S. .வைத்தியநாதன்,வில்லிவாக்கம் கிளை செயலர்   தோழர். பாண்டுரங்கன் .அண்ணா நகர் கிளை செயலர் . தோழர். வீராசாமி. முன்னாள் கிளை தலைவர் .திருநின்றவூர் மற்றும் வில்லிவாக்கம் கிளை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை நிர்வாகிகளால் சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டின் ஒரு பகுதியாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தோழர் C.ராஜமோகன் கி. பொருளாளர் நன்றி நவில மதிய உணவுடன் மாநாடு முடிவு பெற்றது. மாநாட்டில் 100 க்கும் மேற்பட்ட தோழர்,தோழியர் பங்கேற்றனர்,
தோழமையுடன்
B.தியாகராஜன்.
கி. செயலர் அம்பத்தூர்

கூட்ட நிகழ்வுகள் ஒரு சில இரு காணொளிகள் மூலம் பதிவிடப்பட்டுள்ளன. உங்கள் mouse pointer மூலம் கிளிக் செய்து பார்க்கவும். ஸ்பீக்கர் ஐ ஆன் செய்து ஆடியோவையும் கேட்கவும்


No comments:

Post a Comment