தோழர்களே ,
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் .
மேதினி போற்றும் தொழிலாளர் தினமான இன்று காலை 10-00 மணியளவில் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் , சென்னை தொலைபேசி மாநிலம் & அண்ணாநகர் கிளை சேர்ந்து மேதினம், நம் சங்க கொடியேற்றலுடன் சிறப்பாக விண்ணதிரும் கோஷங்களுடன் கொண்டாடப்பட்டது.
பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு அண்ணாநகர் கிளை தலைவர் தோழர் செல்லையா தலைமை ஏற்று நடத்தினார் .கிளை செயலர் தோழர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்று பேசினார் . பின்னர் சென்னை மாநில தலைவர் தோழர் M ..முனுசாமி , மாநில செயலாளர் தோழர் தங்கராஜ், மாநில துணைத்தலைவர் தோழர் M. கோவிந்தராஜ் , தோழர் சோமசுந்தரம் கிளை உறுப்பினர், தோழர் R .குணசேகரன் மாநில உதவி செயலாளர் , தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் மாநில உதவி செயலாளர், தோழர் P .சுப்ரமணியன் மாநில உதவி செயலாளர், தோழியர் மாலா வில்லிவாக்கம் பிரதிநிதி , தோழர் வீரபத்திரன் சைதாப்பேட்டை கிளை செயலாளர், தோழர் கோவிந்தராஜூலு மாநில அமைப்பு செயலாளர் , தோழர் மஞ்சுநாத் அண்ணாநகர் கிளை பிரதிநிதி, தோழர் A.S வைத்தியநாதன் , கிளைசெயலாளர் , வில்லிவாக்கம் ஆகியோர் பேசினார்கள். மேதின நன்னாளில் நம்முடைய ஓய்வூதிய மாற்றத்தை நிச்சயம் பெற்றே தீருவோம் என உறுதிபட பேசினார்கள் . நமது சங்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது , வெற்றி பெறுவது திண்ணம் என்று எல்லோரும் திருப்தியுடன் பேசினார்கள் .அண்ணாநகர் பொருளாளர் தோழர் பக்தவத்சலம் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார் .
சுமார் 70 உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள் .கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நெஞ்சம் இனிக்க இனிப்பும், வெய்யிலுக்கு இதமாக குளிர்ந்த மோரும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment