Monday, 19 December 2022

 

சென்னையில் தமிழ் மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் இணைந்து நடத்திய கூட்டு போராட்டம்.

19-12-2022 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை பூக்கடை பஜார் தொலைபேசி நிலைய வளாகத்தில் ,ஏழாவது மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைகளை BSNL ஓய்வூதியர்களுக்கும் 01-01-2017 முதல் அளிக்க வேண்டி , நம் அகில இந்திய சங்கத்தின் அறைகூவலுக்கு ஏற்ப தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கம் இரண்டும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் ஓய்வூதியர்கள் நாள் கொண்டாடப்பப்பது . சுமார் 500 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்திழும் , பின்னர் நடைபெற்ற  கூட்டத்திலும் கலந்து கொண்டார்கள் . கூட்டத்தில் பேசிய அனைத்து  தலைவர்களும் நம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

ஜனவரி 2023 ல் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தில்  இன்னும் திரளாக ஓய்வூதியர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்கள். நிகழுக்களில் எடுக்கப்பட்ட நிழற் படங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.


No comments:

Post a Comment

  Joint call given by AIBSNLPWA, AIBDPA, SNPWA, TPPU and BDPA(I)   today 07-10-2026 ,to protest against the Order issued by the  BSNL Corpor...