தோழர்களே ,
கல்மண்டபம் கிளையின் 4வது மாநாடு 24-09-2022 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி அளவில் கல்மண்டபம் தொலைபேசி நிலையம் அருகில் அமைந்துள்ள தாயில்பட்டி நாடார்கள் சங்கம் மகாலில் கிளைத்தலைவர் தோழர் மகேந்திரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலாளர் தோழர் பிட்சைமோகன்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார் மத்திய, மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் பல கிளை செயலர்கள் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தார்கள். கிளை யின் செயல்பாட்டறிக்கை யை செயலர் தோழர் பிச்சை மோகன்ராஜ் தாக்கல் செய்தார் . தோழர் கோதண்டன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் . இரண்டும் அவையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கைத்தட்டல்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன. கிளைத்தலைவராக தோழர் மகேந்திரன் , கிளை செயலராக தோழர் பிச்சை மோகன்ராஜ் மற்றும் பொருளாளராக தோழர் ராஜேந்திரன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுவைமிகு இனிப்பு , காரம் மற்றும் காபி வழங்கப்பட்டது.
சுமார் 145 தோழர்கள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் அழகிய குடை ஒன்று மாநாட்டு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
தோழர் கோவிந்தராஜூலு நன்றி நவில கிளை மாநாடு இனிய நினைவுகளுடன் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment