



கல்மண்டபம் கிளைக் கூட்டம் 07.04.2022 அன்று மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
கிளைத் தலைவர் தோழர் A மகேந்திரன் தலைமையேற்க கிளைச் செயலாளர் தோழர் T பிச்சை மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G.நடராஜன், மாநில செயலாளர் தோழர் S.தங்கராஜ், மாநில பொருளாளர் தோழர் M.கண்ணப்பன் ஆகியோர் தற்போதைய சங்க செயல்பாடுகள் குறித்தும், ஓய்வூதிய மாற்றம், CGHS குறித்தும் விளக்கம் அளித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் மாநிலச் சங்க உதவி செயலாளர் தோழர் டோமினிக், அமைப்பு செயலாளர் தோழர் கோவிந்தராஜுலு மற்றும் அண்ணா நகர் கிளைச் செயலாளர் தோழர் சம்பத் குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிளை உதவி செயலாளர் தோழர் P.ஆனந்தன், அண்ணா நகர் கி.செ. தோழர் சம்பத் குமார் ஆகியோர் பேசினர்.
இக் கூட்டத்தில், இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கொரானா மற்றும் இயற்கை மரணங்களில் மறைந்த தோழர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் புதிய உறுப்பினர்கள் மற்றும் 80 வயது மூப்பு அடைந்தவர்கள் சால்வை அணியப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இத்தருணத்தில் 80 வயதினை கடந்த மூத்த தோழர் பெருமாள் , நம் சங்க தலைவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்தார்
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு, தோழர் A.ராஜேந்திரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.இக் கூட்டத்தில் 100க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.
No comments:
Post a Comment