கோடம்பாக்கம் கிளை மாநாடு 26-03-2022 அன்று மாலை 3-30 மணி அளவில் தொலைபேசி நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி , சங்கத் கொடிகளை ஏற்றிய பிறகு அகில இந்திய பொருளாளர் தோழர் T .S . விட்டோபன் அவர்கள் தலைமை ஏற்றார் .கிளை செயலர் தோழர் சாம்பசிவம் அனைவரையும் வரவேற்று பேசினார் .அகில இந்திய துணை பொது செயலர் தோழர் K .முத்தியாலு சங்க வளர்ச்சி, செயல்பாடுகள் , விலைவாசி ஏற்றம் மற்றும் தொழிலாளர் பிரச்சினை குறித்து பேசினார்.
அடுத்து கிளைசெயலர் ஆண்டு அறிக்கையினையும் மற்றும் பொருளாளர் தோழர் மீனாட்சி சுந்தரம் வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பித்தார்கள் இரண்டுமே அவையினரால் கரவொலியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் பேசிய தோழர் விட்டோபன் அவர்கள் சமீபத்தில் டில்லி சென்றிருந்த சமயத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் மற்றும் DOT செயலர் ஆகியோரை சந்தித்து ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நமக்கும் அளித்து ஓய்வூதிய மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்ததை , மிகவும் கவனத்துடன் நம் கோரிக்கைகளை கேட்டு ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளனர் என்று விரிவானதொரு உரை நிகழ்த்தினார்
மாநில செயலர் நடப்பு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார் .தலைவராக தோழர் TRS.ஸ்ரீராம் , செயலாளராக சாம்பசிவம் , பொருளாளராக மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G.நடராஜன் , மாநில தலைவர் தோழர் முனுசாமி , மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் ஆகியோர் நேரம் கருதி சுருக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.
மாநாட்டில் வில்லிவாக்கம் கிளை செயலர் தோழர் வைத்தியநாதன், பொருளாளர் தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் ,அசோக்குமார் செங்கல்பட்டு கிளை தலைவர் ரங்கநாதன் , செயலர் தோழர் ஒளி , அண்ணாநகர் கிளை செயலர் தோழர் சம்பத்குமார் , குரோம்பேட்டை கிளை செயலர் மாரிமுத்து ,மாநிலத் துணைத் தலைவர் டொமினிக் , சுப்ரமணியம் , அமைப்பு செயலர் கோவிந்தராஜூலு ,ஆகியோர் கைத்தறி துண்டு அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
மாநாட்டின் முடிவு நிகழ்வாக தோழர் பார்த்திபன் கிளை உதவி செயலர் நன்றி நவில மாநாடு முடிவு பெற்றது.
மாநாட்டில் சுமார் 250 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
.
No comments:
Post a Comment