25.08.2021 அன்று சென்னை தொலைபேசி தலைமை பொதுமேலாளருடன் (C G M) ஒரு சந்திப்பு.
தோழர்களே அனைவருக்கும் வணக்கம்!
மாநில சங்கத்தின் சார்பாக சென்னை தொலைபேசி முதன்மை பொதுமேலாளர் அவர்களுடன் 25.08.2021 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில்
மாநில தலைவர் M.முனுசாமி ,
மாநில செயலாளர் S.தங்கராஜ் ,
வில்லிவாக்கம் கிளை தலைவர் தோழர் P.கங்காதரன்.
ஆகியோர் கலந்து கொண்டார்கள். BSNL ஓய்வூதியர் பயன்படுத்தி வரும் Land Line & Broadband 60 % சலுகை கட்டணத்தை கடந்த ஜீன் 2021 முதல் 10 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் 60 % ஆக மாற்ற வேண்டுகோள் கொடுத்துள்ளோம்.இதில் Financial பிரச்சனை உள்ளதால் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட தோழர்கள் Request கடிதம் கொடுக்க வேண்டிக்கொள்கின்றோம்.
கடிதத்துடன் பென்சன் புத்தகத்தில் ( PPO ) உள்ள முதல் மற்றும் இரண்டாம் பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து
DGM. OP,
BSNL Chennai Telephone,
78. Purasavakkam High. Road.
Chennai. 600010.
விலாசத்திற்கு அனுப்பி விட்டு மாநில சங்கத்திற்கு தகவல் கொடுக்க வேண்டுகிறோம். உங்களது தொலைபேசி எண் கண்டிப்பாக குறிப்பிடவும்.
Medical bill claim fund சம்மந்தமாக ஒன்றும் செயல்பட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக C G M தெரிவித்தார்.
Fiber Line வேண்டுபவர்களுக்கு அதே தொலைபேசி எண் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நன்றி.
தோழமை வாழ்த்துக்களுடன்
S.தங்கராஜ்.
மாநில செயலர்26.08.2021.