Wednesday, 29 April 2020

It is very heartening to know that our Chromepet Member Com. A.GUNASEKARAN DGM ( Vig) Retd has donated a sum of Rs 54,000/- towards Corona Relief Fund . He has sent the amount to Tamilnadu Chief Minister Public Relief Fund. 
Chennai TD Circle Conveys its Greetings to Com. A.Gunasekaran.

.








Sunday, 26 April 2020

Our CHQ has released a e-Journal of our association APRIL 2020. 
A link has been given below. By clicking the link the e-journal could be read
.
Please CLICK the Given LINK to read April e-Journal


Saturday, 25 April 2020

Com. Basha, Member of Chromepet Branch ( Chennai TD Circle) of AIBSNLPWA  from 10.04.2020 preparing lunch for  not less than 50 persons with the help of his wife in his house & distribute the same to the have nots residing in the streets/ Platforms in and around the areas of Pammal, Pallavaram, Pozichalur, Anangaputhur etc, every day till today.
HATS OFF to his dedicated Service involving his family. Chromepet Branch feels proud of having such member and the Branch respects his yeoman Service to the have nots.
R. Marimuthu
Br. Secy/ 
Chromepet.

Friday, 24 April 2020

PRESS RELEASE ON DA FREEZING
PRESS RELEASE :  CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND WORKERS, TAMILNADU.                                                                                                     23/04/2020
          மத்திய நிதி அமைச்சகம் தனது 23/04/2020  தேதியிட்ட உத்தரவில் விலைவாசி உயர்விற்கேற்ப மத்தியஅரசு ஊழியர்களுக்கும், மத்தியஅரசு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படியை (பஞ்சபடி/DA)       July 2021 வரை நிறுத்திவைப்பதாகவும், நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியானது பிறகு வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளது. இந்த உத்திரவு ஏற்கனேவே தங்களின் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம் முதல் பெரும் தொகை வரை  பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்த மத்தியஅரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதுகுறைந்தபட்சம் 4% முதல் 6 மாதங்களுக்கும் , 8% அடுத்த ஆறு மாதங்களுக்கும், 12% அடுத்த ஆறு மாதங்களுக்கும் பஞ்சபடியானது வழங்கப்படாது என உத்திராவிடப்பட்டுள்ளது

          முறையாக அரசுக்கு வருமானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் TDS என்ற பெயரில் வருமானவரியை  முன்னதாக செலுத்திவிட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்களின் பஞ்சபடியை மத்தியஅரசு, கிடையாது என்று அறிவித்ததை மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.
          ஆவக்காய் ஊறுகாய் தயாரிப்பதையும், நாட்டின் பொருளாதார கொள்கையையும் ஒரேமாதிரி கையாளும்  இந்த மத்தியரசின் தவறான மற்றும் பெரும்பணக்காரர்களுக்கு ஆதரவான பொருளாதாரகொள்கையின் காரணமாக விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியின் கொடுமையால் குறைந்திருக்கும் பணப்புழக்கத்தை இந்த அகவிலைப்படியை கொண்டுதான் மத்தியஅரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சமாளித்துகொண்டியிருக்கும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பானது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது மட்டுமின்றி பணப்புழக்கத்தை குறைக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

          பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராகடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதியை (contingency fund) மற்றும்  அவசரகால நிதிகளை  மக்களுக்காக  பயன்படுத்தாமலும்,  புல்லட்ரெயில், புதிய பாராளமன்ற கட்டிட செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்  கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சபடியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லா விலையில் விற்கப்படும் சூழ்நிலையில்   பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காமலிருப்பது, எரிகிற வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் என்பதுபோல் இந்த பேரிடர்காலத்தில் சுங்க கட்டணத்தை உயர்த்தியது என அரசு ஊழியர் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை இந்த அரசானது தொடர்ந்துகொண்டியிருக்கிறது.
         
          இத்தகைய மக்கள் விரோத மற்றும் அரசு ஊழியர் விரோத போக்கை மத்தியரசு உடனடியாக கைவிடவேண்டுமென்றும், பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியாற்றிக்கொண்டிருக்கும் அரசுஊழியர்களின் பஞ்சபடி நிறுத்த உத்திரவை வாபஸ் பெறவேண்டுமென்றும் மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம்
M.துரைபாண்டியன் , பொதுச்செயலாளர்.

SUGGESTIONS

DA Freezed For 
CG Employees And Pensioners
 For 
18 Months.

Wednesday, 22 April 2020

கண்ணீர் அஞ்சலி 
அன்பார்ந்த தோழர்/தோழியரே

நமது AIBSNLPWA CHTD மாநில துணை தலைவர் மற்றும் திருத்தணி கிளையின் தலைவருமான திரு U. பழனி DGM Retd அவர்களின் மூத்த மகன் திரு இளங்கோ அவர்கள் சிறுநீரக கோளாறினால் மரணமடைந்தார் என்பதினை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்

கடந்த 19−04−2020 ஞாயிறன்று திரு பழனி அவர்களின் துணைவியார் இறைவனடி அடைந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் திரு பழனி அவர்களுக்கு மாநில நிர்வாகம் தனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

தோழர் தங்கராஜ்
மாநில செயலாளர்

Monday, 20 April 2020


அன்புத் தோழர்களே,
இதுவரை அகில இந்திய மற்றும்   மாநில, சங்கங்களின் , வேண்டுகோளுக்கிணங்க தாராளமாக நிதி அளித்துள்ள அனைத்து தோழர்களுக்கும் மாநில சங்கம் நன்றியை உரித்தாக்குகிறது. பல பேரிடர்களை நம் நாடு இதற்கு முன் சந்தித்த போது நாம் நிதி வழங்கி நற்பெயர் பெற்று சிறப்படைந்துள்ளோம்.  அதைப்போன்று கொரோனா நுண்ணுயிர் கிருமி நாடெங்கும் பரவி மனித உயிர்களை பறித்து வரும் இந்த  நேரத்தில் , நாட்டு மக்களை காத்திட செய்து வரும் பணிக்கு ஒரு நாள் ஓய்வூதியத்தை வழங்கவேண்டுமென்று நம் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு,  இணங்க முடியாதபடி ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் செய்வதறியாது ஆயிரக்கணக்கான நம் தோழர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
இந்திய அளவில் நம் மாநில சங்கத்தை  முன்னிலையில் நிறுத்தி வைக்க வேண்டியது நம் கடமை. பொது நலம் காப்பதில் நம் தோழர்கள் என்றும் முன்னிலை வகிக்கக் கூடியவர்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க மாநில சங்க , கிளைச் சங்க அனைத்து நிர்வாகிகளும் , எல்லா கிளைகளிலும் உள்ள அனைத்து தோழர்களும்  தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்ய மனமுவந்து தாராளமாக நிதி வழங்குமாறு மாநில சங்கத்தின் சார்பாக விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
மாநில சங்கத்தின் வங்கி கணக்கு விபரம் ...

மாநில வங்கி கணக்கு எண்ணிற்கு Money Transfer செய்து நம் மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் அவர்கள் மொபைல் எண் 9444 648494 க்கு குறுஞ்செய்தி   ( SMS ) அல்லது வாட்சப்பில் செய்தி அனுப்பவும், அல்லது மொபைலில் அழைத்து விபரம் சொல்லவும் .
தோழமை வாழ்த்துக்களுடன்,
S . தங்கராஜ் ,
மாநில செயலர் CHTD.

Sunday, 19 April 2020


வருந்துகிறோம் 
நமது மாநில சங்கத்தின் உதவி தலைவரும் திருத்தனி கிளையின் தலைவருமான தோழர். U.பழனி அவர்ளின் துணைவியார் திருமதி சந்திரா அம்மையார் அவர்கள் இன்று 19.04.2020 இயற்கை எய்தினார் என்பதைஆழ்ந்த  வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம்அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு மாநில சங்கம் ஆழ்ந்த வேதனையையும், வருத்தத்தையும் ,  அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது . அன்னார் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ். மா.செ.

Tuesday, 14 April 2020

Friday, 10 April 2020


தோழர்களே.
வணக்கம் 
சென்னை மாநில சங்கத்தின் , 
நமது மூத்த. தோழர் 
M.S.முத்துகிருஷ்ணன் அவர்கள்  
கொராணா நிவாரண நிதியாக
  ₹25000/  PM நிதிக்கும்  
₹10000/  CM நிதிக்கும்
 தனது ஒரு மாத ஓய்வூதியத்தை 
வழங்கியுள்ளார் என்பதை 
மிக்க மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக் கொள்கின்றோம்
மாநில சங்கம் மனதார 
பாராட்டுகிறது..


Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...