அன்புத் தோழர்களே,
இதுவரை அகில
இந்திய
மற்றும் மாநில, சங்கங்களின்
, வேண்டுகோளுக்கிணங்க
தாராளமாக
நிதி
அளித்துள்ள
அனைத்து
தோழர்களுக்கும்
மாநில
சங்கம்
நன்றியை
உரித்தாக்குகிறது.
பல
பேரிடர்களை
நம்
நாடு இதற்கு முன் சந்தித்த
போது
நாம்
நிதி
வழங்கி
நற்பெயர்
பெற்று
சிறப்படைந்துள்ளோம். அதைப்போன்று
கொரோனா
நுண்ணுயிர்
கிருமி
நாடெங்கும்
பரவி
மனித
உயிர்களை
பறித்து
வரும் இந்த நேரத்தில்
, நாட்டு
மக்களை
காத்திட
செய்து
வரும்
பணிக்கு
ஒரு நாள் ஓய்வூதியத்தை வழங்கவேண்டுமென்று
நம்
சங்கம்
விடுத்துள்ள
வேண்டுகோளுக்கு,
இணங்க
முடியாதபடி
ஊரடங்கு
உத்தரவு
அமுலில்
உள்ளதால்
செய்வதறியாது
ஆயிரக்கணக்கான
நம்
தோழர்கள்
திகைத்து
நிற்கிறார்கள்.
இந்திய அளவில்
நம்
மாநில
சங்கத்தை முன்னிலையில் நிறுத்தி
வைக்க
வேண்டியது
நம்
கடமை.
பொது நலம் காப்பதில் நம் தோழர்கள் என்றும் முன்னிலை வகிக்கக் கூடியவர்கள் என்பதை
மீண்டும்
நிரூபிக்க
மாநில
சங்க
, கிளைச்
சங்க
அனைத்து
நிர்வாகிகளும்
, எல்லா
கிளைகளிலும்
உள்ள
அனைத்து
தோழர்களும் தங்களுடைய பங்களிப்பை
உறுதி
செய்ய
மனமுவந்து
தாராளமாக
நிதி
வழங்குமாறு
மாநில
சங்கத்தின்
சார்பாக
விரும்பி
வேண்டி
கேட்டுக்
கொள்கிறோம்.
மாநில சங்கத்தின்
வங்கி
கணக்கு
விபரம்
...
மாநில வங்கி கணக்கு எண்ணிற்கு Money Transfer செய்து நம் மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் அவர்கள் மொபைல் எண் 9444 648494 க்கு குறுஞ்செய்தி ( SMS ) அல்லது வாட்சப்பில் செய்தி அனுப்பவும், அல்லது மொபைலில் அழைத்து விபரம் சொல்லவும் .
தோழமை வாழ்த்துக்களுடன்,
S . தங்கராஜ் ,
மாநில செயலர் CHTD.
No comments:
Post a Comment