Sunday, 1 December 2019

தோழர்களே,
ஒன் இன்கிரிமெண்ட் பெற்ற  தோழர்களுக்கு 78.2% நிலுவைத்தொகை 20-06-2013 முதல் வழங்கப்பட வேண்டியது குறித்த கேஸ்   கோர்ட் -ல்  இருப்பதால் வழங்கப்படவில்லை. இது பற்றிய வினாக்களை நாம் சென்னையில் நடைபெற்ற கடந்த பென்ஷன் அதாலத்- ல் எழுப்பினோம். இதற்கு DOT தரப்பில் இருந்து ஒரு பதில் வந்தது.அதாவது இந்த கேஸ் விஷயத்தில் நேரிடையாக சம்பந்தப்பட்டவர்கள் நீங்கலாக  ஒன் இன்கிரினென்ட்  பெற்றுள்ள  மற்றதோழர்களுக்கு வழங்குவதைப்பற்றி யோசிக்கலாம் என்றார்கள் . 
கோர்ட் கேஸ் நீண்டு க்கொண்டே போகும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நம் மாநிலத்தலைவர் தோழர் M .முனுசாமி, மாநிலச் செயலர் தோழர் S தங்கராஜ் மற்றும் மாநில உதவித் தலைவர் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் Dy .CCA  அவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தினர். Dy .CCA அவர்களும் நிலுவைத்தொகை வழங்குவதற்கான ஆயத்த வேலைகள் நடந்து வருவதாவும்,  இன்னும் ஓரிரு வாரங்களில் 78.2% நிலுவைத்தொகை அவர்களின் வங்கிக்  கணக்கில்  கிரெடிட் செய்யப்படும் என்ற மகிழ்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
தோழர்களே  அந்த நிலுவைத்தொகை விரைவில் உங்கள் ஓய்வூதியம் பெரும் வங்கிக் கணக்கில் பற்று வைக்கப்படும்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
S தங்கராஜ் 
மாநில செயலர்.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...