இன்று
30−11−2019 அகில இந்திய BSNL ஓய்வூதிய நலச்சங்கம் சென்னை தொலைபேசி மாநிலம் திருத்தணி கிளையின் பொதுக்குழு கூட்டம் கிளை
தலைவர் திரு பழனியின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
திருத்தணி
கிளையின் செயலாளர் தோழர் நடராஜன், பொருளாளர் தோழர் தேவன் மற்றும் 40 க்கும் மேற்பட்ட கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
கிளையின் செயலாளர் தற்போது கிளையின் மொத்த உறுப்பினர்கள் 74 இதனை அதிகரிக்க அனைத்து உறுப்பினர்களும் பாடுபட வேண்டுகோள் விடுத்தார்.
மாநில
செயலாளர் தோழர் தங்கராஜ், உதவி செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைவர் தோழர் ஶ்ரீனிவாசன், திருநின்றவூர் கிளை தலைவர் தோழர் வீராசாமி, காஞ்சிபுரம் கிளையின்
செயலாளர் தோழர் முனுசாமி மற்றும் குரோம்பேட்டை கிளையின் செயலாளர் தோழர் மாரிமுத்து ஆகியோரும் பங்கு பெற்றார்கள்.
தற்போது
BSNL MRS ல் இருந்து CGHS க்கு மாறுதல், வழிமுறைகள், ஒவ்வொரு கேடருக்கும் செலுத்த வேண்டிய தொகை, one increment case பற்றிய செய்திகள், 7 வது சம்பளக்குழு பரிந்துறை அடிப்படையில் நமது BSNL பென்ஷன் மாற்றம், வரும் 6வது மாநில மாநாடு ஆகிய விஷயங்கள் உறுப்பினர்களுக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டது.
தோழர்
பொன்னுரங்கம் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.
திருத்தணி
கிளை செயலாளர்
தோழர்
நடராஜன்.
No comments:
Post a Comment