Saturday, 14 December 2019

வில்லிவவாக்கம் கிளை கூட்டம் இன்று மாலை 4-00 மணி அளவில் கிளைத் தலைவர் தோழர் கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. கிளை செயலர் தோழர் வைத்யநாதன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். சமீபத்தில் காலமான தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாநில செயலர் தோழர் கோவிந்தராஜன் , அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் ரத்னா , மாநில நிர்வாகிகள் தோழர்கள் அசோக்குமார் , கண்ணப்பன் ஆகியோர் பேசினார்கள்.
MRS  திட்டத்திலிருந்து CGHS  திட்டத்திற்கு மாற வேண்டுகோள் விடப்பட்டது.  ஓய்வூதிய மாற்றம் பெறுவதில் உள்ள சிக்கல் விளக்கப்பட்டது. VRS  மூலம் இலாகாவை விட்டு வருகிற தோழர்களை நம் சங்கத்தில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தோழர் பாபு நன்றி உரை வழங்க கூட்டம் முடிவுற்றது.


No comments:

Post a Comment

 செங்கல்பட்டு கிளையின் இரண்டாவது ஆண்டுவிழா செங்கல்பட்டு வேணு மஹாலில் 07-01-2025 அன்று காலை 0930 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. முதற்கட்டமாக ந...