வில்லிவாக்கம் கிளைக் கூட்டம் 08 -06 -2019 சனிக்கிழமை மாலை 4 -௦௦ மணிக்கு தலைவர் தோழர் கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. செயலர் தோழர் வைத்யநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். மறைந்த தோழர் ரங்கநாதன் அவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இம்மாதம் 12 புதிய உறுப்பினர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக செயலர் பலத்த கரகோஷங்களுக்கிடையே அறிவித்தார். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நம் கிளையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 1000 ஐ கடக்க வேண்டும் என்று இலக்கினை வகுத்து அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்கு தெரிந்த அறிந்த ஒய்வு பெரும் தோழர்களை / ஏற்கனவே ஒய்வு பெற்று எந்த சங்கத்திலும் இணையாத தோழர்களை நம் சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று பணித்தார் . கூட்டத்தில் பேசிய தோழர்கள் கோவிந்தராஜூலு ,ரங்கதுரை, ரத்னா அகில இந்திய உதவி பொது செயலர் மாநில பொருளாளர், கண்ணப்பன் அசோக்குமார் மற்றும் பலர் உரையாற்றினார்கள். பேசியவர்கள் ஏழாவது சம்பள குழுவின் பரிந்துரைகளை நமக்கும் கிடைக்க மத்திய சங்கம் பாடுபடும். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்கள். தோழர் அசோக்குமார் தமதுரையில் எல்லா தோழர்களும் ஜூலை மாதத்திற்குள் வருமான வரி கட்டுவதற்கு முயல வேண்டும் என்றார். புதிய உறுப்பினர்கள் கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கௌரவி க்கப்பட்டார்கள். சுமார் 70 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு நிலவியது. உரையாற்றுவோரின் செய்திகளை முழுமையாக உள் வாங்கிக் கொண்டார்கள். பொருளாளர் தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் அவர்கள் பானி புயல் நிவாரண நிதி வசுலிப்பதில் முனைப்பாக இருந்தார் . மொத்தத்தில் மிக அழகான டீம் ஒர்க் . தோழர் பாபு நன்றி நவில கூட்டம் இனிதாக முடிவடைந்தது.
1000
No comments:
Post a Comment