வேளச்சேரி கிளையின் ஏப்ரல் மாதக் கூட்டம் தண்டிஸ்வரம் கட்டிட நலச்சங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளைத் தலைவர் P .விஜயராகவன் தலைமையேற்க , செயலர் தோழர் ஆனந்தன் கூட்டத்தை அருமையாக நடத்தினார் .இந்த மாதம் பிறந்த நாள் உள்ள தோழர்கள் துண்டு போர்த்தப்பட்டு வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர் . பிறந்த நாள் குணம் தோழர்களும் வந்திருந்தோருக்கு இனிப்பு , பேனாபோன்ற அன்பளிப்புகள் வழங்கியது சிறப்பிற்குரியது..
அகில இந்திய ஓய்வூதியர் கூட்டமைப்பு பொருளாளர் தோழர் V .சுந்தர் அவர்கள் சிறப்புரையாற்றினார் .81 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 10 பெண் உறுப்பினர்களும் அடங்குவர். மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நங்கநல்லூரில் புதிய கிளை உதயமாகும் என பலத்த கைத்தட்டல் களுக்கிடையே செயலர் அறிவித்தார். தோழர் AG பாண்டுரங்கன் தணிக்கையாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அடுத்த மாதம் கத்தரி வெய்யில் காரணமாக மாதந்திரக்கூட்டம் நடத்தலாமா என செயலர் வினவியதும் , நடத்தலாம் என்று அனைவரும் ஒரே குரலில் வழிமொழிந்து உறுப்பினர்களுக்கு நம் சங்கத்தின் மேல் இருக்கும் பற்றை , ஈர்ப்பினை பறைசாற்றியது.
தோழர் P .சுப்ரமணியன் நன்றி உரை வழங்க கூட்டம் இனிதே முடிவுற்றது.

No comments:
Post a Comment