Sunday 10 March 2019


அன்புத் தோழர்களே ,
வணக்கம். சமீபத்திய கஜா புயலின் தாக்கத்தால் டெல்ட்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மிகவும் பாதிப்புள்ளாகின . அவ்வாறு மிகவும் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் உள்ள கொறுக்கை எனும் சிற்றூரில் இயங்கி வரும் திருவள்ளுவர் அருள்நெறி உதவி நடுநிலைப்பள்ளி மேற்க்கூரைகளை இழந்து மரத்தடியில் சுமார் 175 இரு பாலர் பள்ளியில் குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
அந்த பள்ளிக்கு மேற்க்கூரைகள் நிரந்தரமாக  நம் ஓய்வூதியர் தமிழ் மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கங்களின்  கூட்டு முயற்சியால் சுமார் ரூ  5.50 லட்சம் செலவில் கட்டித்தர முடிவு செய்து அதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 17-03-2019 ஞாயிறு கட்டிட வேலைகள் முடிக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்.
அந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில & சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சென்னை தொலைபேசி மாநிலத்தின்  உறுப்பினர்கள் , ஆர்வலர்கள் மற்றும் மாநில , கிளை மட்ட நிர்வாகிகள் யாரேனும் கொறுக்கை சென்று கலந்து கொண்டு சிறப்பிக்க விரும்பினால் நம் மாநில பொருளாளர் தோழர் எம்.கண்ணப்பன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
அவர் கைபேசி எண் : 9444 64 84 94.
பள்ளி மறு நிர்மாணப் பணிகள் நடைபெற்று வரும் சமீபத்திய (06-03-19) நிழற்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன 










No comments:

Post a Comment

 " KYP "  SUBMISSION NOTIFICATION: