Saturday, 2 February 2019

தோழர்களே ,
ஜனவரி மாதம் 24ஆம் தேதி நம் மாநில செயலர் தோழர் ஆர்வி. மற்றும் சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் தங்கராஜ் மற்றும் பொருளாளர் தோழர் கண்ணப்பன் ,திருவாரூரில் இருக்கும் தமிழ் மாநில உதவி பொருளாளர் தோழர் முருகேசன்  ஆகியோர் கொண்ட புனரமைப்பு  குழு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில்  கொறுக்கை எனும் கிராமத்திற்கு சென்று அங்கு இயங்கி வந்த திருவள்ளுவர் அருள் நெறி உதவி பெரும் நடுநிலை பள்ளி சமீபத்திய கஜா புயலினால் மிகவும் இடிந்து போயுள்ளதை கண்டு கண்ணீர் உகுத்தது.
சுமார் 175 பேர் படிக்கும் இருபாலர் பள்ளியை சீரமைக்க பண உதவி செய்வதாக கூறி பள்ளி முன்னாள், இந்நாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்களிடம் உடனடியாக பள்ளியை சீரமைக்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு படிப்பு கொஞ்சமும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறினார்கள். உடனே அவர்களும் ஒரு மாதம் அல்லது 40 நாட்களுக்குள் கட்டி விடலாம் என உறுதி அளித்துள்ளனர்.
அதன் பிரகாரம் நேற்று பிப்ரவரி முதல் தேதி மனை பூஜைகள் செய்து வேலைகளை துவக்கி விட்டார்கள். 
இனி பள்ளி கட்டிடம் மற்றும் சிதிலமடைந்த அய்யன் திருவள்ளுவர் சிலையும்  சீரமைக்கப்பட்டு புத்துயிர் பெறும் .
வாழ்க நம் சங்க சேவைகள் !  வளர்க நம் சங்கம் !!  வளர்க ! வளர்கவே !!
மனை பூஜை நடைபெற்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...

No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...