Thursday, 9 July 2020

தோழர்களே 
சென்னை தொலைபேசி யில் மனித வள துறையில் ( HRD )பணியாற்றி வந்த திரு. B .மஞ்சுநாத் ( DGM ) அவர்கள் 30-06-2020 அன்று பணி நிறைவில் ஓய்வு பெற்றார். அவரை மரியாதை நிமித்தம் தோழர்கள் S .கிருஷ்ணமூர்த்தி ( ACS ), V.N.சம்பத்குமார், அண்ணா நகர் கிளை செயலர் , மற்றும் G .ஆனந்தன் வேளச்சேரி கிளை செயலர் ஆகியோர் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் . அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி , அளித்து வந்த உதவிகளுக்கு நன்றி பாராட்டினார்கள். திரு மஞ்சுநாத் அவர்கள் , அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் . நம் சங்கம் சிறப்பாக பணிபுரிந்து வருவதை கருத்தில் கொண்டு நம்முடன் இணைய விருப்பம் தெரிவித்து அண்ணாநகர் கிளையில் ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவரை மனதார வாழ்த்தி , வருக வருக என வரவேற்கிறோம்.  அவர் ஓய்வுக்காலம் வளமாக , நலமாக , உடல் ஆரோக்கியத்துடன் விளங்க வாழ்த்துகிறோம்.


Friday, 3 July 2020



தோழர் பரத்ராஜன் CSS , வில்லிவாக்கம்  கிளை உறுப்பினர்
31-05-2012 ல்  ஒய்வு பெற்றவர் . 02-07-2020 அன்று இதய கோளாறு காரணமாக இயற்கை எய்திவிட்டார் .இறுதி சடங்குகள் இன்று (03-07-2020) காலை நடைபெற்றன 
அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

Wednesday, 1 July 2020

Please CLICK the link 
given below to read 
Pensioner Patrika 6 
in e-copy format.