Monday, 26 September 2022

 

தோழர்களே ,
கல்மண்டபம் கிளையின் 4வது மாநாடு 24-09-2022 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி அளவில் கல்மண்டபம் தொலைபேசி நிலையம் அருகில் அமைந்துள்ள தாயில்பட்டி நாடார்கள் சங்கம் மகாலில் கிளைத்தலைவர்  தோழர் மகேந்திரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலாளர் தோழர் பிட்சைமோகன்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார் மத்திய, மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் பல கிளை செயலர்கள் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தார்கள். கிளை யின் செயல்பாட்டறிக்கை யை செயலர் தோழர் பிச்சை மோகன்ராஜ் தாக்கல் செய்தார் . தோழர் கோதண்டன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் . இரண்டும் அவையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கைத்தட்டல்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன. கிளைத்தலைவராக தோழர் மகேந்திரன் , கிளை செயலராக தோழர் பிச்சை மோகன்ராஜ் மற்றும் பொருளாளராக தோழர் ராஜேந்திரன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுவைமிகு இனிப்பு , காரம் மற்றும் காபி வழங்கப்பட்டது.
சுமார் 145 தோழர்கள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் அழகிய குடை ஒன்று மாநாட்டு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

தோழர் கோவிந்தராஜூலு நன்றி நவில கிளை மாநாடு இனிய நினைவுகளுடன் நிறைவடைந்தது.






Monday, 12 September 2022


 

மைலாப்பூர்கிளை மாநாடு 10.09.2022 அன்று R K,நகர் தொலைபேசி  நிலையத்தில் தோழர் M.மூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றதுமாநாட்டில் அகில இந்திய சங்க மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். கிளையின் தலைவராக தோழர் M.மூர்த்தி அவர்களும் கிளையின் செயலாளராக தோழர்  L.விஜய குமார் அவர்களும் கிளையின் பொருளாளராக தோழர் M.பாஸ்கரன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்தோழர் L.விஜய குமார் கி.செயலர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
L.விஜய குமார். கி.செ.
மைலாப்பூர்கிளை.


 

தோழர்களே ,

சென்னை தொலைபேசி மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் - தோழியர் K .மோகனா தம்பதியரின் 50வது திருமண பொன் விழா இன்று 11-09-2022 அன்று மிக சிறப்பாக BSNL சமூக கூடம் அண்ணாநகரில் நடைபெற்றது . மத்திய , மாநில மற்றும் அனைத்து கிளை சங்க பொறுப்பாளர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் .

விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் கண்ணப்பன்-மோகனா தம்பதியர் மற்றும் குடும்பத்தினர் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்கள்.






Friday, 2 September 2022

 

LC/DLC List which had expired on 31-08-2022 has been provided . By clicking the LINK you could view all names.

Click the LINK to see the list





  Life Certificates Valid Up To 31-01-2026 is released by CCA TN Circle. It contains 49 pages in Pdf format . A link is given. Just click an...