Friday, 18 July 2025

 

மனிதச்சங்கிலி இயக்கம் 25.7.2025 அன்று சென்னையில்

மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி கேட்கும் பொறுப்பை AIPRPA மாநில உதவிச் செயலர் தோழர் M. நாராயணன் ஏற்றுக் கொண்டு, இன்று (16.7.2025) பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்றார்

Chief PMG அலுவலகம், சித்ரா சாலையிலிருந்து...., மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடற்கரை என நாம் முன்மொழிந்த இடங்களை காவல்துறை ஒவ்வொன்றாக  நிராகரித்தது.

கடும் போராட்டத்திற்குப் பிறகு, எழும்பூர் 

 இராஜரத்தினம் ஸ்டேடியம் எதிரில் 

 25.7.2025 மாலை 3 மணி முதல் 4 மணி வரை

 மனிதச் சங்கிலி இயக்கம் நடத்திட காவல் துறை அனுமதியளித்துள்ளது.

இந்த அனுமதியை பெறுவதற்காக அரை நாள் கடுமையாக போராடிய தோழர் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

 *அனைத்து சங்க பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்

ஆலோசனைக் கூட்டத்தில் உறுதியளித்த எண்ணிக்கையில் ஓய்வூதியர்களை போராட்டத்திற்கு திரட்டிட முழு சக்தியையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்

C.K. நரசிம்மன் 
கன்வீனர் 
கூட்டுப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு

No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...