திருத்தணி கிளையின் இரண்டாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 10-08-2024 அன்று மாலை 3-00 மணிக்கு சீனிவாச செட்டி பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மத்திய , மாநில சங்க பிரதிநிதிகள் மற்றும் சில கிளை செயலர்கள் கலந்து கொண்டார்கள். தேசீய கொடி மற்றும் சங்க கொடிகள் ஏற்றப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன .
மிக சீராக நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் விஸ்வநாதன், சின்னராஜ் மற்றும் காமி.வெங்கடேசன் ஆகியோர் முறையே தலைவர் , செயலாளர் மற்றும் பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கிளையின் துணைத்தலைவர் தோழர் U .பழனி மிக அற்புதமாக செய்திருந்தார். சுவையான சிற்றுண்டி , குளிர்பானம் மற்றும் தேநீர் அவ்வப்பொழுது வழங்கப்பட்டன.
Unanimously Elected New Secretary Com. Chinna Raj.
No comments:
Post a Comment