Saturday, 27 July 2024

 கண்ணீர் அஞ்சலி


கல்மண்டபம் கிளை செயலர் மறைந்தார் 
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கல்மண்டபம் பகுதியை, தொழிற் சங்க பணிகளாலும், ஓய்வூதியர் நல சங்க பணிகளாலும் மற்றும் சமூக சேவைகளாலும் தன் கற்கோட்டையாக மாற்றிய மாவீரர், அஞ்சா நெஞ்சர்,  AIBSNLPWA துவக்கப்பட்டபோது தோழர் T . பிட்சை மோகன் ராஜ் அவர்கள் வரவேற்பு குழு தலைவராக பணியாற்றி , துவக்க மாநாட்டினை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த மாவீரர் . அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் கல்மண்டபம் கிளை செயலாளர் தோழர் T.பிச்சை மோகன்ராஜ் அவர்கள் நேற்று இரவு (26-07-2024) 10 மணியளவில் காலமானார் என்ற துயர செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
     மூத்த தொழிற் சங்க வாதியும் நம் ஓய்வூதியர் சங்க முன்னோடியுமான தோழர் பிச்சை மோகன்ராஜ் அவர்களின் சீரிய நற்தொண்டு பணிகள் நம் நெஞ்சில் என்றும் நிழலாடும்.  மன உறுதி மிக்கவர், மனித மாண்பு கொண்டவர் தன் இறுதி காலம் வரை சமூக சேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த செயல் வீரர்.
     அன்னாரின் மறைவு பல்வேறு அமைப்புகளுக்கு ஓர் பேரிழப்பு.  நம் கண்ணீர் அஞ்சலியுடன் அவரது குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். 

ஆழ்ந்த துயரத்துடன் 
S . தங்கராஜ் .
மாநில செயலர்

Sad Demise

We mourn the passing of Comrade T. Pitchai Mohanraj, the Reception Committee President of our 2009 AIBSNLPWA Formation Conference in Chennai. His dedication and hard work were crucial to the event's success. His loss is deeply felt. We pay our heartfelt respects to Comrade T. Pitchai Mohanraj, whose contributions will always be remembered.

On behalf of CHQ, 
V. Vara Prasad 
General Secretary







No comments:

Post a Comment

Pension Revision case in High Court of Delhi  It was listed in the supplementary under item 28, 29 & 30. The Bench rose early for lu...