தோழர்களே ,
குரோம்பேட்டை கிளையின் சமீபத்திய ஆண்டு பொதுக்குழு மாநாட்டிற்குப்பின் புதிதாக கிளை நிர்வாகிகளாக பதவி ஏற்றபின், குரோம்பேட்டை தொலைபேசி நிலைய வளாகத்தில் 20-07-2024 மாலை நடத்தப்பட்ட முதல் பொதுக்குழு கூட்டம் மிக பிரமாண்டமாக இருந்தது. கிளை தலைவர் தோழர் M .கிருஷ்ணகுமார் தலைமை ஏற்று நடத்தினார் வரவேற்பு உரையில் கிளை செயலர் தோழர் பி. சேகர் கிளையில் புதிதாக 21 உறுப்பினர்கள் சேர்ந்துள்ள செய்தியினை பலத்த கைத்தட்டலுடன் அறிவித்து , அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.
தோழர் D. கோபாலகிருஷ்ணன் அகில இந்திய தலைவர் , தோழர் M .அரங்கநாதன் அகில இந்திய துணைத் தலைவர் , மற்றும் சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகள் தோழர் M .முனுசாமி - மாநில தலைவர் , தோழர் S .தங்கராஜ் மாநில செயலாளர் , தோழர் M .கண்ணப்பன் மாநில பொருளாளர் ,தோழர் A .சுப்பிரமணியன் மாநில உதவி பொருளாளர் , தோழர் P சுப்பிரமணியன் மாநில உதவி செயலாளர் , தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் மாநில உதவி செயலாளர், தோழர் R .குணசேகரன் மாநில உதவி செயலாளர் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். 750 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக்கிளை வெகுவாக பாராட்டப்பட்டது .அனைத்து நிர்வாகிகளும் மற்றும் கலந்துகொண்ட மற்ற கிளை செயலர்களும் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டார்கள் .
அகில இந்திய தலைவர் தோழர் DG சுமார் ஒரு மணி நேரம் 78.2% கேஸ் , LPD கேஸ் , ஓய்வூதிய மாற்றம் தற்போதைய நிலைமை , நம் சங்கம் கடந்து வந்த பாதை , பெற்றுள்ள வெற்றிகள் என்பன குறித்து விரிவாக விளக்கமாக உரையாற்றினார் .தோழர்களின் சந்தேகங்களுக்கு விரிவாக பேசி தெளிவு படுத்தினார்
பொதுக்குழு கூட்டத்திற்கு சுமார் 210 உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். கூட்ட முடிவில் தோழர் K .M .ராஜா நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment