தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.
நமது சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் 6-வது மாநில மாநாடு 27.04.2022 அன்று காலை 10.00.மணிக்கு ஸ்ரீ பாலாஜி மஹால் குரோம்பேட்டையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய கொடியை மாநில தலைவர் தோழர் M.முனுசாமி அவர்களும் சங்க கொடியை அ.இ.உதவி பொதுச்செயலாளர் தோழர் V.ரத்னா அவர்களும் ஏற்றி வைத்தார்கள். மாநில செயலாளர் தோழர் S.தங்கராஜ் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட சார்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மாநில தலைவவர் தோழர் M.முனுசாமி அவர்கள் தலைமையில் அ.இ.துணைத் தலைவர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து நீண்ட உரையாற்றினார். பென்சன் மாற்றம் சம்பந்தமாக 23.03.2022 முதல் 26.03.2022 வரை தலைநகர் டில்லியில் நடைபெற்ற அனைத்து விபரங்களையும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து அ.இ.துணைத்தலைவர் தோழர் A.சுகுமாரன் அவர்கள் One increment பிரச்சனையில் நிர்வாகம் மேல்முறையீடு செல்லாமல் இருக்க மாநாடு முடிவு எடுக்க வேண்டும் என்று மாநாட்டை வாழ்த்தினார். தோழர். திரு G.செல்வம் G.M Rtd அவர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் ஓய்வூதியர் நலனுக்காக பாடுபடும் தலைவர்களை பாராட்டினார். தோழர். V.ராமாராவ் அ.இ.உதவி பொருளாளர் அவர்கள் நமது சங்கத்திற்கு Identity கொடுக்கப்பட்டுள்ளது. நமது அமைப்பு ஒரு லட்சம் உறுப்பினர்களுடன் வளர்ந்து வருகிறோம் என்றார் தாம்பரம் மாநகராட்சி உறுப்பினர் தோழர் திருமதி G.விஜய லட்சுமி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தோழர் V.சுந்தர் அ.இ.பொருளாளர் AIFPA அவர்கள் மாநாட்டை வாழ்த்தி C G H S மாற்றம் பற்றி விளக்கம் அளித்தார். தொடர்ந்து தோழர் R.வெங்கடாசலம் மா.செயலாளர் தமிழ் நாடு இன்று பல்வேறு பகுதிகளில் கிளைகள் துவங்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் நம்மிடம் பேசும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம்.சங்கத்தின் பால் ஈர்ப்பின் காரணமே அனைவரும் இங்கு அமர்ந்து உள்ளோம். கஜா புயலில் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நடுநிலை பள்ளிக்கு வகுப்பறை கட்டி கொடுத்துள்ளோம் என்று மாநாட்டை வாழ்த்தினார். தோழர் K.முத்தியாலு Dy.G.S.நமது பென்சனர் பத்திரிக்கா வீடு தேடி வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது 5000 உறுப்பினர்கள் மாநில சங்கத்தில் உள்ளனர். இந்தியாவில் நாம் தான் நாட்கணக்கில் பென்சன் பெற்று வருகிறோம். G S T என்ற கடுமையான வரி விதிக்கப்படுகிறது என்று மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார்.
தோழர் T.S.விட்டோபன் அ.இ.பொருளாளர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார்.மாநில செயலாளர் தோழர் S.தங்கராஜ் 2018 ஜனவரி முதல் 2022 மார்ச் வரையிலான ஆண்டறிக்கையை சமர்பித்தார்.தோழர். M.கண்ணப்பன் மாநில பொருளாளர் 01.04.2017 முதல் 31.03.2022 வரையில் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். ஒருசில விவாதத்திற்கு பிறகு ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு ஏற்றுக்கொள்ளப்ட்டது.தோழர் V.ரத்னா அ.இ.உ.செ.புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
தோழர் M .முனுசாமி மாநில தலைவராகவும்,
தோழர் S .தங்கராஜ் மாநில செயலாளராகவும்,
தோழர் M .கண்ணப்பன் மாநில பொருளாளராகவும்
மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .மற்ற நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர்.G.நடராஜன் அ.இ.துணைத்தலைவர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சங்கம் உருவான வரலாறு பற்றியும் எடுத்துரைத்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கட்ட நிர்வாகிகளுக்கும் கிளையின் செயலாளர்களுக்கும் விடுபட்ட மாநில சங்க நிர்வாகிகளுக்கும் அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். சங்க செய்திகளை வண்ணமயமாக , சிறப்பாக வாட்சப்பிலும் , வலைத்தளத்திலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்துவரும் தோழர் N .மோகன் அவர்களின் சேவைகளை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார் . தோழர் M.கண்ணப்பன் மாநில பொருளாளர் அனைவருக்கும் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய மாநில சங்க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் சார்பாளர்கள் மற்றும் முன்னனி தோழர்களை மாநில சங்கம் மனதார பாராட்டுகின்றது. வாழ்த்துகின்றது.
நன்றி.
நிர்வாகிகள் பட்டியல் அடுத்த அறிவிப்பில்
S.தங்கராஜ். மா.செ.
01.05.2022
No comments:
Post a Comment