தோழர்களே!
மாதவரம் புதிய கிளை துவக்க ஆலோசனை கூட்டம் தோழர் N.தனபால் அவர்கள் தலைமையில் 19.01.2022 அன்று மாதவரம் தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில்
தோழர் S.தங்கராஜ் மாநில செயலாளர்,
தோழர் கங்காதரன், வில்லிவாக்கம் கிளை தலைவர்.,
தோழர் A.S.வைத்தியநாதன், வில்லிவாக்கம் கிளைசெயலாளர்.,
தோழர் M.கண்ணப்பன் மாநில பொருளாளர்,
தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் மாநில அமைப்பு செயலாளர்
ஆகியோர் கலந்துகொண்டு மாதவரம் பகுதியில் கிளை அமைக்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துக்கூறினார்களள்.
கூட்டத்தில் கிளை அமைப்பு மாநாட்டை நடத்துவதற்கு தோழர் A.S.வைத்தியநாதன் கி. செ.வி.வாக்கம் தோழர் N.தனபால் தோழர் M.தேவேந்திரன் தோழர் C.கோபால் தோழர் B.நாராயணமூர்த்தி தோழர் M.யுவராஜ் தோழர் V.அசோக் குமார் ஆகிய 7 பேரை உள்ளடக்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.கமிட்டியின் கன்வீனராக தோழர். M.தேவேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.கமிட்டி உறுப்பினர்கள் கலந்து பேசி பெப்ரெவரி 2022.க்குள் கிளையின் அமைப்பு மாநாட்டை நடத்த வேண்டும்.கூட்டத்தில் கொரொணா தொற்றையும் பொருட்படுத்தாமல் 40. தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
தோழர் M.தேவேந்திரன் நன்றி கூறி முடித்து வைத்தார்.
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment