Wednesday, 5 January 2022

 

காஞ்சிபுரம் கிளை ஆண்டு பொதுக்குழு கூட்டம் 04-01-2022 (செவ்வாய் கிழமை) மாலை 0330 மணி அளவில் புதிய தொலைபேசி நிலைய வளாகத்தில் தொடங்கியது. தோழர் A.முனுசாமி கிளைத் தலைவர் தலைமையேற்று நடத்தினார்.
மாநில செயலர்  தோழர் S.தங்கராஜ், மாநில துணை செயலர் தோழர் ரங்கநாதன், மாநில அமைப்புச் செயலர் தோழர். ரவிக்குமார் மற்றும் மாநில துணைத் தலைவர் தோழர் U.பழனி திருத்தணி, மாநில துணைத் தலைவர் தோழர் S.சீனிவாசன், மாநில உதவிச் செயலர் தோழர் அட்சயகுமார், செங்கல்பட்டு   கிளைச் செயலர் தோழர் C. ஒளி, திருநின்றவூர் கிளைச் செயலர்  தோழர் லோகநாதன், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர்.ரங்கநாதன் தன்னுடைய உரையில் அனைத்துத் தோழர்களும்  CGHS க்கு மாற்றிக் கொள்வது நல்லது என்று உரைத்தார்.
கிளைச் செயலாளர் தோழர்  M. முனுசாமி அவர்கள் தன்னுடைய உரையில் ஆண்டு வரவு செலவுக் கணக்கை சமர்பித்தார். எல்லோருடைய ஒரு மித்த குரலால் ஏற்கப்பட்டது. தன்னுடைய உரையில் கிளையில் கிட்டத்தட்ட 30 உறுப்பினர்கள் CGHS க்கு மாறியுள்ளதாக தெரிவித்தார்.
தோழர் U.பழனி அவர்கள் தன்னுடைய உரையில் மெடிக்கல் பில்ஸ் with voucher செட்டில் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தலைமைக்கு தன்னுடைய பாராட்டை தெரிவித்தார்.
கிளை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கொளரவிக்கப் பட்டனர்.
தோழர்.சீனிவாசன் அவர்கள் தன்னுடைய உரையில் COVID சூழ்நிலையை சுட்டிக்காட்டி அனைத்துத் தோழர்களும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல்,   சானிடைஸர் கொண்டு கைகளை கழுவுதல் மற்றும் தடுப்பூசி செலுத்ததாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தினார். Pay Commission பற்றி சங்கம் தெளிவான பாதையில் சென்று கொண்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
புதிய உறுப்பினர்கள் தேர்வு
தோழர் . ரங்கநாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்திக் கொடுத்தார். அதில் இப்பொழுது இருக்கும் தோழர் .A. முனுசாமி தலைவர் தோழர் .M.முனுசாமி செயலாளர், மற்றும் தோழர் V. ஜெயராமன்  பொருளாளர் ஆகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
தோழர் .தங்கராஜ் தன்னுடைய உரையில் pay anomaly விஷயத்தில் சங்கம் சரியான வகையில் செயல்பட்டு பாதிக்கப்பட்டுள்ள  தோழர்களுக்கு அரியர்ஸ் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி நம்முடைய சங்கத்திற்கு மட்டுமே உரியதாகும்.
CGHS reimbursement, Medical bills. Life Certificate for Landline ஆகியவை பற்றி CGM CHTD யிடம் பேசியதையும் அதன் விளைவாக மெடிக்கல் பில்ஸ் with வவுச்சர்க்கு பணம் ஒதுக்கியதைத் தெரிவித்தார். கிளைச் செயலர் தோழர் M.முனுசாமி அவர்களின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டி அவரையே தொடர்ந்து பொறுப்பை தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
காஞ்சி கிளைத் தோழர் ஈஸ்வரன் அவர்கள் தான் CGHS ல் இணைந்தது, தோழர். C.S. உமையொருபாகன் I TAX Dept leave encashment க்கு நோட்டீஸ் அனுப்பியது பற்றியும் அதை எவ்வாறு அணுகுவது என்பதையும் சுட்டிக் காட்டினார். தோழர் காளிதாஸ் அவர்கள் IDA CDA mapping Delay பற்றி சுட்டிக் காட்டி தலைமை CCA விடம் பேசி துரிதப் படுத்தக் கோரினார்.
கிட்டத்தட்ட 90 கிளை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிளைக் கூட்டத்தில் தோழர்களுக்கு சிற்றுண்டியுடன் தேநீரும் உபசரிக்கப்பட்டது.(உபயம்: தோழர் .A. அப்பண்டைராஜன் )
தோழியர் திருமதி. இந்திராகுமாரியின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...