Saturday, 10 July 2021

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள உத்தரவின் தமிழாக்கம் கீழே உங்கள் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கம்
அன்பு ஓய்வூதிய சகோதர சகோதரிகளே, உங்களின் மருத்துவ செலவினை திரும்ப பெறுவதற்காக  BSNLCO/4/2021 dt. 7-7-2021 என்ற  எண்ணிற்கு கீழ் அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில்....3 விருப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 
1. CGHS is first Scheme. இதில் சேர்ந்தவர்கள் சி.ஜி.ஹெச்.எஸ் ல் கட்டிய பணத்தை திரும்ப பெறுவதற்காக   பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் விண்ணப்பித்து பெறுவது தான் கடைசி. அதற்கு பின் மருத்துவம் சார்ந்த செலவினங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நாட வேண்டியது இல்லை. 
மற்ற 2 விருப்பத்திற்கு இவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
 
2. Total amount of 15 days Salary + DA as on Retirement date i.e. Last Pay Drawn + DA on Retirement is maximum claim per year for with Voucher is second scheme.
மருத்துவ செலவினை இரசீது கொடுத்து பெறுபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் நாளில் பெற்ற கடைசி மாத சம்பளத்துடன்  + டி. சேர்ந்த மொத்த தொகை எவ்வளவோ அதை மட்டுமே ஒருவர்  ஒரு ஆண்டில் திரும்ப பெற முடியும்.
 
3. Rs.1000- per month for without Voucher is third scheme. இந்த வகையில் விருப்பம் கொடுத்தவர்கள், மாதம் ரூ.1000- மட்டுமே பெற முடியும். 
 
இரசீது கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ மருத்துவ செலவினைப் பெறுகின்றவர்கள், அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து செய்த செலவினை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு விண்ணப்பித்து பணத்தை திரும்ப பெற வேண்டும். 
CGHSல் சேராதவர்கள்  எப்போது வேண்டுமானாலும் CGHS க்கு மாறிக் கொள்ளலாம்.
 
இரசீது இல்லாமல் மாதம் ரூ.1000- பெறுகின்றவர்கள் அல்லது இரசீது கொடுத்து பணம் பெறுகின்றவர்கள் விரும்பினால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விருப்பக் கடிதம் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். 
நீங்கள் முன்பே விருப்ப விண்ணப்பம் கொடுத்து இருந்தாலும், புதிய உத்தரவு படி, மேற்கண்ட CGHS  தவிர மற்றவர்கள், கீழ் கண்ட ஆதாரங்களை எதிர் வரும் 10-08-2021 க்கு முன்னர் அந்தந்த மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்றடையும் வகையில், தங்கள் பகுதி பொது மேலாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். 
அப்படி கொடுப்பவர்கள் 2020-21 நிதி ஆண்டிற்கான மருத்துவ நிலுவைத் தொகையைப் பெற முடியும் என்கிறது அந்த உத்தரவு. 
 கொடுக்க வேண்டிய ஆதாரங்கள்.
 
1. ஓய்வூதியரின் புதிய விருப்ப விண்ணப்பம். அந்த விண்ணப்பத்தில் குடும்ப ஓய்வூதியர் அல்லது வாரிசுதாரரின் (Certification) சான்றொப்பம். 
அதாவது, ஓய்வூதியர் கையொப்பத்திற்கு கீழே குடும்ப ஓய்வூதியர் அல்லது வாரிசின் பெயரும் கையொப்பமும் இட்டு கொடுக்க வேண்டும். (New option form given by Pensioner alongwith Spouse i.e. Family Pensioner or any other Nominee to get Reimbursement or Allowance) 
2. தற்போது ஓய்வூதியம் வாங்கும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (Copy of first Page of Bank Pension Account Book) 
3. வருமான வரி அட்டையின் நகல் (Copy of PAN card) 
4. கையொப்பம் இட்டு கேன்செல் செய்த காசோலை ஒன்று.
(One Cancelled Cheque Leaf with Pensioner's Signature) 
5. தற்போதைய முகவரி ஆதாரம் 
(Pensioner's Address proof like Aadhaar card, Voter ID) 
6. வங்கியில் கொடுத்து உபயோகத்தில் உள்ள கைபேசி எண்
(Working Mobile number which was given to Bank Account)
 
விருப்ப விண்ணப்பத்துடன் மேற்கண்ட அனைத்தும் 10-8-2021 க்கு முன்னர் கொடுக்க வேண்டும். (All the above documents are must with the Option form and it should be reached to Circle Office on or before 10-08-2021) 
CGHS சேர்ந்தவர்கள் இதைக் கொடுக்கத் தேவையில்லை. 
அனைத்து நகல்களிலும், நகலுக்கு உரியவர் கையொப்பம் இட வேண்டும்.
( All the Xerox copies should have self attestation)



No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...