அருமை தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் ஒரு அன்பான வேண்டுகோள்.கொரொணா 2 வது கொடுந் தொற்றின் காரணமாக நாம் பல்வேறு தோழர்களை இழந்துள்ளோம். கொரொணாவை தமிழகத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை அனைவரும் அறிவோம். அதற்காக தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்றும் மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றும் கொரொணா நிவாரண நிதியாக நமது மாநில சங்க வங்கி கணக்கிலும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலும் நமது தோழர் தோழியர்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.அதன் அடிப்படையில் 12.06.2021 வரையில் நமது மாநில சங்கத்தின் சார்பாக 302 தோழர் தோழியர்கள் கொரொணா நிவாரண நிதி வழங்கி உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். ஊரடங்கு காலத்திலும் நமது மாநில சங்க வங்கியில் ₹ 4,50,401/யும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் ₹ 1,065,00/யும் நிவாரண நன்கொடை வழங்கிய அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டுகின்றோம்.வாழ்த்துகின்றோம். இருப்பினும் நமது மாநில சங்கத்தின் உறுப்பினர்கள் 5000 பேர் உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.கடந்த அறிக்கையில் கிளை வாரியாக நிவாரணம் வழங்கியோர் பட்டியலை வெளியிட்டு இருந்தேன். கொரொணா நிவாரணம் வழங்குவதற்கு 15.06.2021 கடைசி நாள் என்று முதல் அறிக்கையில் தெரிவித்து இருந்தேன். ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஒரு சில கிளை செயலாளர்கள் மற்றும் தோழர்களின் வேண்டுகோளை ஏற்று நிவாரணம் வழங்குவதற்கான கால அவகாசத்தை 30.06.2021 வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கின்றோம். சற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் இதைபயன்படுத்திக்கொண்டு மாநில சங்க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் கிளையின் நிர்வாகிகள் முன்னணி தோழர்கள் அனைவரும் நிவாரண நிதி வழங்குமாறு மீண்டும் மாநில சங்கத்தின் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம். கொரொணா நிவாரணம் என்பது தமிழக மக்களை பாதுகாப்பதற்காக என உணர்ந்து அனைவரும் தங்களின் மேலான பங்களிப்பை அளிக்குமாறு மீண்டும் மாநில சங்கத்தின் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
முககவசம் அணிவோம்!
தடுப்பூசி போடுவோம்!
கொரொணாவை விரட்டுவோம்!
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.
13.06.2021.
No comments:
Post a Comment