Thursday, 24 June 2021

  ISSUE OF PENSION SLIP BY PENSION DISBURSING BANKS

மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியபின் ,ஓய்வூதிய  தொகையின் பகுதிகளான, அடிப்படை ஓய்வூதியத் தொகை, IDA , நிலுவைத்தொகை ( ஏதேனும் இருப்பின் )  , வருமானவரி பிடித்தம் ஆகியவைகளை ( Pension Slip ) ஓய்வூதியர்கள் கைப்பேசி எண்ணிற்கு SMS , மற்றும் e -மெயில் மூலமாக ஓய்வூதியத்தை வழங்கும் வங்கிதெரிவிக்க வேண்டும் என DoP &PW அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு அளித்துள்ளது. உத்தரவின் நகல் கீழே   கொடுக்கப்பட்டுள்ளது.



Sunday, 13 June 2021

 

அருமை தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் ஒரு அன்பான வேண்டுகோள்.கொரொணா 2 வது கொடுந் தொற்றின் காரணமாக நாம் பல்வேறு தோழர்களை இழந்துள்ளோம். கொரொணாவை தமிழகத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை அனைவரும் அறிவோம். அதற்காக தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்றும் மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றும் கொரொணா நிவாரண நிதியாக நமது மாநில சங்க வங்கி கணக்கிலும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலும் நமது தோழர் தோழியர்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.அதன் அடிப்படையில் 12.06.2021 வரையில் நமது மாநில சங்கத்தின் சார்பாக 302 தோழர் தோழியர்கள் கொரொணா நிவாரண நிதி வழங்கி உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். ஊரடங்கு காலத்திலும் நமது மாநில சங்க வங்கியில் ₹ 4,50,401/யும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் ₹ 1,065,00/யும் நிவாரண நன்கொடை வழங்கிய அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டுகின்றோம்.வாழ்த்துகின்றோம். இருப்பினும் நமது மாநில சங்கத்தின் உறுப்பினர்கள் 5000 பேர் உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.கடந்த அறிக்கையில் கிளை வாரியாக நிவாரணம் வழங்கியோர் பட்டியலை வெளியிட்டு இருந்தேன். கொரொணா நிவாரணம் வழங்குவதற்கு 15.06.2021 கடைசி நாள் என்று முதல் அறிக்கையில் தெரிவித்து இருந்தேன். ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஒரு சில கிளை செயலாளர்கள்   மற்றும் தோழர்களின் வேண்டுகோளை ஏற்று நிவாரணம் வழங்குவதற்கான கால அவகாசத்தை 30.06.2021 வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கின்றோம். சற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் இதைபயன்படுத்திக்கொண்டு மாநில சங்க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் கிளையின் நிர்வாகிகள் முன்னணி  தோழர்கள் அனைவரும் நிவாரண நிதி வழங்குமாறு மீண்டும்  மாநில சங்கத்தின் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம். கொரொணா நிவாரணம் என்பது தமிழக மக்களை பாதுகாப்பதற்காக என உணர்ந்து அனைவரும் தங்களின் மேலான பங்களிப்பை அளிக்குமாறு மீண்டும் மாநில சங்கத்தின் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
முககவசம் அணிவோம்!   
தடுப்பூசி போடுவோம்!    
கொரொணாவை விரட்டுவோம்!
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.
13.06.2021.


Wednesday, 9 June 2021

 

கொரோனா நிவாரண நிதியாக நம் உறுப்பினர்கள் அளித்துள்ள நன்கொடை இன்று 5 லட்சத்தை கடந்துவிட்டது. நன்கொடை அளித்த அத்தனை நன்கொடையாளர்களுக்கும் நன்றி ! பாராட்டுக்கள் !! மற்றவர்களும் நன்கொடை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Just Zoom and see who is the Train Pilot !

Tuesday, 8 June 2021

 

DOP & PW has issued instructions for payment of provisional Family Pension immediately on receipt of claim for Family Pension and Death certificate from eligible Family Member.

The order is produced here under.






Sunday, 6 June 2021

 



                                                                                                           Rs.  10 Lakhs


Friday, 4 June 2021

 

நன்கொடை அளிக்க வேண்டுகோள் விடுத்து 12 நாட்களே ஆகியிருக்கும் நிலையில் ரூ 4,00,000/- ( ரூபாய் 4 லட்சம் ) கடந்து, நன்கொடையில்  இன்னமும் மேலே மேலே சென்று கொண்டிருக்கும் நம் சென்னை மாநில சங்கத்திற்கு கொரோனா நிவாரண நன்கொடை நிதி வழங்கிவரும் அத்துணை அன்பு உள்ளங்களுக்கு நன்றி!நன்கொடை பெறுவது எல்லாமே ஆன்லைனில் தான் என்பது ஒரு விசேஷம் . இவ்வரிய செயலில் ஈடுபட்டிருக்கும் அத்துணை கிளை மற்றும் மாநில நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள். 



 

A proud moment.  Yes AIBSNLPWA Chennai Telephone Circle has crossed Rs 3 Lakhs Corona Relief Fund Collection. Thanks for all donors and all executive members of our association who have made this possible within a short period.

Our Corona Relief Fund collection grows....
கொரோனா தொற்று விலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பி , வீட்டு குவாரன்டைனில் இருந்து வரும் வில்லிவாக்கம் கிளை தோழர் S .கெம்புராஜ் அவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 5000/- அளித்துள்ளார்கள். அவருடைய அரிய செயலுக்கு , அளித்துள்ள நன்கொடைக்கு நம் பாராட்டுக்கள்.விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்கள் 

காஞ்சிபுரம் கிளையில் பெருவாரியான தோழர்களை அணுகி ஒரு கணிசமான தொகையினை பெற்றுத் தந்து இன்னும் நன்கொடை காஞ்சி கிளையிலிருந்து வரும் என்று உற்சாகமாக கூறியிருக்கும் கிளை செயலர் தோழர் M முனுசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.


Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...