Tuesday, 23 March 2021

 

காஞ்சிக் கிளைக்கூட்டம் 22.3.21 மாலை 0330 மணி அளவில் தொடங்கியது. தோழர் A.முனுசாமி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். Circle Secy தோழர்  தங்கராஜ், மாநில துணைச்செயலர் தோழர் .ரங்கநாதன் , மாநில அமைப்புச் செயலர் தோழர் .ரவிக்குமார் மற்றும் Chrompet கிளை செயலர் தோழர் .மாரிமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். 80 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றது.

கிளைக்கூட்டம் கொரானா விதிமுறைகளை அனுசரித்து அனைத்துத் தோழர்களுக்கும் Sanitizer மற்றும் Mask அளிக்கப்பட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி கூட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலர் தோழர் .முனுசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

தோழர்கள், MRS, CGHS, ID Card, Income Tax on விடுப்புச் சலுகை, pension revision மற்றும் DA தடை பற்றிய தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டனர்.

Group  C & D பிரிவு ஊழியர்களின் பென்ஷன் முடிவு செய்வதில் Stagnation Increment கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடுபட்டுள்ளது, அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.

தோழர் திரு.ரங்கநாதன் தன்னுடைய உரையில் MRS மற்றும் CGHS பற்றித் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்தார். GHS மாற்றிக் கொள்வதே சிறந்தது என்று எடுத்துரைத்தார். FMA நிலையான மருத்துவப்படி RS.1000 பெறுவது பற்றியும் எடுத்துரைத்தார்.

Circle Secy தோழர் தங்கராஜ் தன்னுடைய  உரையில் MRS, ID Card பெறுவதில் தடைகள் சரி செய்யப்படும் மற்றும் Pension revisionக்கு கோர்ட்டை அணுகியுள்ளதைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் தோழியர் சாரதா தாம் CGHS க்கு மாறியுள்ளதாகவும், CGHS மூலம் பரிந்துரைக்கப்பட்டு MIOTல் உடல் பரிசோதனை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

கிளைக் கூட்டத்தில் தோழர்களுக்கு சிற்றுண்டியுடன் தேநீர் உபசரிக்கப்பட்து.

தோழியர் திருமதி இந்திராகுமாரியின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே  நிறைவுற்றது.


No comments:

Post a Comment

  Pensioners' Patrika July - August 2025 Soft Copy has been posted here under with a LINK to open it. Please click the Link and read it....