Saturday, 8 August 2020

 

தோழர்ளே. கேரளா மாநிலம் மூணார் பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தங்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த தொழிலாள தோழர்கள் மண் சரிவினால் சுமார் 80 க்கு மேற்பட்டோர் மண்ணுக்குள்ளே புதையுண்டு பலர் உயிர் இழந்துவிட்டனர் . முக்கியமான இணைப்புப் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டடியால் மீட்பு பணிகள் துவங்க கால தாமதமாகி விட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் , காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில்  சிகித்சை மேற்கொண்டு இருப்பவர்களுக்கும் , வீடிழந்த மக்களுக்கும் அஞ்சலியையும் ஆழ்ந்த வேதனையையும் சென்னை மாநில சங்கம் தெரிவிக்கிறது.

மேலும் 07-08-2020 அன்று இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில்  கன மழை பொழிகிறது , விமான ஒட்டு தளம் மழைநீர் தேங்கி வழிந்து ஓடுகிறது . அந்த நேரத்தில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து வந்து ரன்வேயில் இறங்க முயல்கிறது. அப்படியே வழுக்கிக்கொண்டு ஓடுதளத்திற்கு அருகாமையில் இருக்கும் சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விமானமே இரண்டாக உடைகிறது. விமானத்தின் முன் பகுதியில் இருந்த விமானிகள் உட்பட சுமார் 17 பேர்கள் இறந்து விட்டனர். மீட்கப்பட்ட பலர் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர் விபத்தில் இறந்தவர்களுக்கு சென்னை தொலைபேசி மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை, அதிர்ச்சியை ,  தெரிவித்துக் கொள்கிறது .காயங்களுடன் சிகித்சை  பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். 
S. தங்கராஜ் ,
மாநில செயலர்.
சென்னை மாநிலம் 



 





No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...