பூக்கடையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்:
14/08/20 அன்று NFTE-BSNL, AIBSNLPWA, NFTCL ஒன்றிணைந்து சென்னை தொலைபேசியில் பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினரின் அநாகரிகமான பேச்சை வன்மையாக கண்டித்து பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தோழர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர். தோழர்கள் மகேந்திரன், பழனியப்பன் ஆகியோர் கண்டன முழக்கங்களை முழங்கினர். தோழர்கள் சி.கே.மதிவாணன் , கண்ணப்பன், பாபு உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.இறுதியில் பா.ஜ.க. உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே மீது மத்திய அரசும் , பா.ஜ.க. வும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மூத்த உதவித் தலைவர்
NFTE-BSNL
ckmbsnl@gmail.com
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே மீது நடவடிக்கை எடுக்க கோரி NFTE- BSNL , AIBSNLPWA,
NFTCL சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்:
நேரம்: மதியம் 1.30 மணிக்கு
தோழர் கண்ணப்பன்
மாநிலப் பொருளாளர், AIBSNLPWA
தோழர் பாபுமாநிலத் தலைவர், NFTCL
தோழர் சி.கே.மதிவாணன்
பி.எஸ்.என்.எல் ஊழியர்களை தேசவிரோதிகள் எனவும் , பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்றும் பொறுப்பின்றி உளறிக் கொட்டிய கர்னாடக மாநிலத்தின் பா.ஜ.க.நாடாளுமன்ற
உறுப்பினர் மீது உரிய நடவடிக்கையை பா.ஜ.க.வும், மத்திய அரசும் எடுக்கக் கோரி தேசிய கொடி ஏந்தி பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். நன்றி !
No comments:
Post a Comment