அருமை தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.
மார்ச் 2020 முதல் கொராணா வைரஸ் காரணமாக மாநில சங்க செயல்பாடு கிளைசங்க செயல்பாடுகள் கூட்டங்கள் நடத்த முடியாமை
மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும் ஓய்வூதியர் பிரச்சனைகளை நிர்வாகம் மற்றும் அகில இந்திய சங்கம் மூலமாக தீர்த்து வருகின்றோம். குறிப்பாக VRS தோழர்களுக்கு Provisional Pension பெற்றுத்தந்த ஒரே அமைப்பு நமது AIBSNLPWA.
MRS Option - With Voucher /Without Voucher
Medical Card Revalidation.
VRS
தோழர்களுக்கு குடியிருப்பு நீட்டிப்பு.
VRS தோழர்களுக்கு ex -gratia.,
Medical Bill,
CGHS Claim,
போன்ற பல்வேறு ஓய்வூதியர்
சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அகில இந்திய சங்கம் எடுத்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளின்
தீர்வும் காணப்பட்டுள்ளது. அனைத்து VRS தோழர்களையும் நேரில்
சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து
நம் சங்கத்தில் இணைய Form கொடுத்து வந்துள்ளோம். மாதங்கள் 5 .ஆகிவிட்டன. ஆகவே கிளைசெயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் VRS தோழர்களை நமது அமைப்பில் உறுபினர்
ஆக்க முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
மேலும் கொராணா நிதி நமது மாநில சங்க ஓய்வூதியர்கள் சார்பாக 11.07.2020 வரை ₹ 3,57,160/- வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வில்லிவாக்கம் கிளையின் பங்களிப்பை மாநில சங்கம் பாராட்டுகிறது. கொராணா நிதி வழங்காத கிளை செயலர்கள் நிர்வாகிகள் ஆர்வம் உள்ள அனைவரும் 31.07.2020 வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். கொராணா நிதி அகில இந்திய நிலவரப்படி ஒரு கோடியை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆகவே தோழர்கள் மனமுவந்து நிதி வழங்கவும்.
ஓய்வூதியர்கள் அனைவரையும் இல்லத்திலேயே இருக்கும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மிகவும் அவசியம் என்றால் மட்டும் வெளியே செல்லவும். வெளியே செல்லும் போது அவசியம் முக கவசம் அணிந்து செல்லவும். போதுமான அளவிற்கு சமூக இடைவெளி விட்டு நிற்கவும். வீட்டிற்கு வந்ததும் கை , கால்களை சோப்பு கொண்டு நன்றாக கழுவவும். மத்திய மற்றும் மாநில அரசு விடுத்துள்ள சுகாதார அறிவுரைகளை கட்டாயமாக பின்பற்றவும்.
ஓய்வூதியர்கள் அனைவரும் தாங்களின் குடும்பத்தாருடன் நலமாக இருக்க வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் நலனில் என்றும் அக்கறை கொண்டிருக்கும் AIBSNLPWA சார்பில் வாழ்த்துக்களை கூறுகிறேன்
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment