Friday, 3 April 2020

அன்புத் தோழர்களே ,
அனைவருக்கும் மாநில சங்கத்தின் தோழமை வணக்கம்.
அகில உலகத்தையும் பயமுறுத்தி கொத்து கொத்தாக மனித உயிர்களை பறித்து வரும் கொரோனா எனும் நச்சுக்கிருமி பரவலை அறவே ஒழித்திட மத்திய , மாநில அரசுகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் மும்முரமாக வேலை செய்து வருகின்றன. அந்த புனித முயற்சிக்கு  உதவிடும் வகையில் நிதி அளிக்க மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன .அதன் அடிப்படையில் நம் ஓய்வூதிய சங்கமும் நம் ஓய்வூதியர்கள் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் அன்று கோரிக்கை விடுத்துள்ளது.
நம் சங்கத்தை சார்ந்த சென்னை தொலைபேசி மாநில ஓய்வூதியர்கள் நன்கொடை அளித்து வருகிறார்கள். அவ்வாறு அளிக்கும் தோழர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
தோழர்களே நீங்கள் அனுப்பும் நன்கொடை மிகவும் பாராட்டுதற்குரியது. நீங்கள் அனுப்பும் நன்கொடையை பிரதமர் தேசிய கொரோனா நிவாரண நிதிக்காகவோ அல்லது முதல்வர் கொரோனா நிவாரண நிதியாகவோ நேரிடையாக அனுப்பலாம். அல்லது நம் மாநில சங்க வங்கி கணக்கில் நெட் பாங்கிங் மூலமாக மணி டிரான்ஸ்பர் (money transfer ) செய்யலாம் அல்லது 144 தடை நீங்கிய பிறகு ஏதாவது ஒரு வங்கி மூலமாக நம் மாநில சங்க வங்கி கணக்கில் பணத்தை கிரெடிட் செய்யலாம்.
அவ்வாறு நன்கொடை அளிப்பவர்கள் தாங்கள் அனுப்பிய பண பட்டுவாடா விபரத்தை , உங்கள் பெயர், எந்தக் கிளை உறுப்பினர், அனுப்பப்பட்ட தொகை , பிரதமர் கொரோனா நிவாரண நிதிக்கா, முதல்வர் கொரோனா  நிவாரண நிதிக்கா அல்லது மாநில சங்கத்தின் மூலமாக அனுப்பப்பட உள்ள கொரானா நிவாரண நிதிக்கா என்ற விபரங்களை SMS அல்லது வாட்சப் மூலமாக மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் அவர்களுக்கு தெரிவிக்கவும். அவர் மொபைல் எண் 9444648494. அவ்வாறு அனுப்ப இயலாதவர்கள் அவர் மொபைல் எண்ணை டயல் செய்து மேற்கண்ட விபங்களை சொல்லலாம் . அவர் மத்திய சங்கத்திற்கு தினம் தோறும் வசுல் விபரங்களை தெரிவிப்பார்.
அவரிடம் விபரங்கள் தெரிவிக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் , விபரங்கள் வலை தளத்தில் , வாட்சப்பில் பதிவிடப்படும். அனைவரின் ஒத்துழைப்பை விரும்பி வேண்டி நிற்கிறோம்.
இதுவரை நன்கொடை அனுப்பியுள்ள அனைத்து தோழர்களுக்கும் நன்றி .
தோழமை வாழ்த்துக்களுடன் ,
S .தங்கராஜ் ,
மாநில செயலர்.
             மாநில சங்க வங்கி கணக்கு எண் 
முதல்வர் கொரோனா தேசிய நிவாரண நிதி வங்கி எண் 






No comments:

Post a Comment