06-03-2020 அன்று
தோழர் . M .முனுசாமி மாநில தலைவர் அவர்களின் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது .
மாநில
செயலர் தோழர்S. தங்கராஜ் கூட்டத்திற்கு வந்திருந்த மாநில அனைத்து செயற்குழு உறுப்பினர்களை வரவேற்றார்.
அமைப்பு நிலை
சம்பந்தமாகவும், VRS
2019 திட்டத்தில் ஓய்வு பெற்ற
ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களை நமது அமைப்பில் இணைப்பது சம்பந்தமாகவும் , தள்ளி வைக்கப்பட்ட ஆறாவது மாநில மாநாடு நடத்துவது சம்பந்தமாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமைப்பு
ரீதியான விவாதத்தை மாநில தலைவர் மற்றும் மாநில செயலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அமைப்பு ரீதியான விவாதங்களில் தோழர்கள் S .கிருஷ்ணமூர்த்தி ACS , M .கோவிந்தராஜன் VP , M .மூர்த்தி VP , M .அரங்கநாதன் ACS ஆகியோர் பங்குபெற்று தங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்தார்கள்.
மத்திய
சங்க துணைத் தலைவர் தோழர் G நடராஜன் அமைப்பு ரீதியாக கடந்த கால அனுபவங்கள் மற்றும் வரலாறு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அகில இந்திய மட்டத்தில் AIBSNLPWA அமைக்கப்பட்ட பிறகே ஓய்வூதிய மாற்றம் , 78.2% IDA
இணைப்பு ஆகியவைகளை பெற்று தந்தது நம் அமைப்புதான் என்றார் 60:40 -ஐ
நீக்கியதன் விளைவாக முழு ஓய்வூதியம் பெற முடிகிறது .தற்போதைய சுழ்நிலையில் ஓய்வூதிய மாற்றத்தை நீதிமன்றம் மூலமாக பெறமுடியும் என்றார்
அகில
இந்திய பொருளாளர் தோழர் T.S. விட்டோபன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கிளைச் செயலர்கள்
தோழர்கள் G .ஆனந்தன் , G .வீரபத்திரன் ,A..S வைத்யநாதன் , S .சாம்பசிவம் ,V .தியாகராஜன் , R .மாரிமுத்து , T .மோகன்ராஜ் , சம்பத்குமார் ஆகியோர்
தங்களுடைய கிளைகளின் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.
மாநில
பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் தமதுரையில் VRS ல் ஒய்வு பெற்றவர்களுக்கு
ஜனவரி மாத சம்பளம் இன்னும் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்றார் . மேலும்
சென்னை தொலைபேசி மாநில CGM திரு
சந்தோஷம் அவர்கள் பிரவரி 2020ல் ஓய்வு பெற்றுள்ளார்
. அவர் நம் சங்கத்தில் இணைய இருக்கும் தகவலைத் தெரிவித்தார்.
இம்மாநில
செயற்குழு கூட்டத்தில் VRS 2019 திட்டத்தில் ஒய்வு பெற்ற தோழர்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன் , L விஜயகுமார் ,j .சுப்ரமணி, G.Y. பாட்சா, முரளி மற்றும் ராகவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். .
முடிவுகள் : 1. அமைப்பு ரீதியாக Whatsapp குரூப்பை Admin மட்டுமே பராமரிப்பது ,
2. ஓய்வூதியர்கள்
ஊழியர்கள்,தகவல்களை மாநில செயலர் பெயரில் மட்டுமே வரவேண்டும்.
3. தேவையில்லாத
எந்த ஒரு தகவலையும் whatsapp ல் பதிவிடக்கூடாது.
4. தள்ளி
வைக்கப்பட்ட 6 வது மாநில மாநாடு வரும் 01-05-2020 மற்றும் 02-05-2020 ஆகிய 2 நாட்கள் குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மஹாலில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
5. ஏற்கனவே
எடுக்கப்பட்ட முடிவின்படி சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது
6. சார்பாளர்களின்
எண்ணிக்கையை தெரிவிக்க 15-04-2020 தேதியை
cutoff தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7. அடுத்த
மாநில செயற் கூட்டத்தை 2020 மார்ச் கடைசி வாரத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தோழர்
S .கிருஷ்ணமூர்த்தி
ACS நன்றி கூறி மாநில செயற்குழு கூட்டத்தை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment