Monday, 20 January 2020

கோடம்பாக்கம் கிளை கூட்டம் 18-01-2020 அன்று மாலை 5 -00 மணி அளவில் தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் துணைத்தலைவரும் , அகில இந்திய பொருளாளருமான தோழர் TS விட்டோபன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.  கிளை செயலர் தோழர் சாம்பசிவம் அனைவரையும் வரவேற்று , கிளை செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார் . அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G . நடராஜன் , மாநில செயலர் தோழர் S .தங்கராஜ் , மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் , மாநில உதவி செயலர்கள் தோழர்கள் ரங்கநாதன் , வள்ளிநாயகம்  மற்றும் அண்ணாநகர் கிளை செயலர் தோழர்.V.N. சம்பத்குமார் , வில்லிவாக்கம் கிளை செயலர் தோழர் .A.S வைத்யநாதன், வில்லிவாக்கம் கிளை உதவி செயலர் தோழர் அசோக் குமார்  ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 
கிளை உறுப்பினர்கள் சிலரின் பிரச்சினைகளைத் தீர்க்க பேருதவி புரிந்த வில்லிவாக்கம் கிளைத் செயலர் தோழர் A.S வைத்யநாதன் அவர்கள் பாராட்டப்பட்டு மாநில நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்கப்பட்டது .
காலம் , நேரம் பாராது அனைத்து கிளை நிர்வாகிகளையும் கலந்து பேசி, VRS ல் செல்ல இருக்கும் ஊழியர்கள் பட்டியலை அளித்து , அவர்களின் கைப்பேசி மற்றும் விலாசங்களை அளித்து அவர்களை சந்தித்து நம் உறுப்பினர் ஆக்கிட பணித்து , ஊக்கப்படுத்திய மாநில பொருளாளர் தோழர் M கண்ணப்பன் அவர்களின்  பணியினை பாராட்டி மத்திய சங்க நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு பரிசாக ஒரு கைக்கடிகாரம் அளிக்கப்பட்டது. பலத்த கைத்தட்டல் அரங்கு எங்கும் நிறைந்து இருந்தது.
சுமார் 10 மகளிர் உறுப்பினர்கள் உட்பட 80 தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சுவையான இனிப்பு, காரம் , காபி அளிக்கப்பட்டது.
தோழர் பார்த்திபன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...