06−11−2019 அன்று புதன் மாலை 04.30 மணிக்கு அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் சென்னை தொலைபேசி
மாநிலம் திருநின்றவூர் கிளையின் மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக கிளையின்
தலைவர் தோழர் வீராசாமி தலைமையில் நடைப்பெற்றது.
முதல்முறையாக இந்த கிளையின் உறுப்பினர்கள் அக்டோபர் மற்றும்
நவம்பர் மாதம் பிறந்தநாள் காண்பவர்களுக்கு கிளையின் சார்பாக இனியபிறந்த நாள்
நல்வாழ்த்துகளும் தெரிவிக்கப் பட்டது.
ஓய்வூதியர்களுக்கு BSNL MRSல் இருந்து CGHSக்கு மாறுதலுக்கு வழிமுறைகள், 7வது CPC அடிப்படையில் நமது ஓய்வூதிய மாற்றம், இந்த மாதம் நமது ஓயவூதியர்கள் அனைவரும் லைப் சர்டிபிகேட்
நமது ஓய்வூதியம் பெற்று வரும் வங்கி/தபால் நிலையத்தில் அளிப்பது, லேண்ட் லைனுக்கு அந்த அந்த கமர்சியல்
ஆபிசில் கொடுப்பது, தவிர வரும் டிசம்பர் 27 மற்றும் 28 நடைபெறும் சென்னை மாநில மாநாடு
குரோம்பேட்டை பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் விபரங்கள், சார்பாளர்/பார்வையாளர் கட்டணம் ரூ 300.00 மற்றும் அகில இந்திய அளவில் நமது
சங்கத்தின் சார்பாக ரூ 40.00 இலட்சம் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு வரும் நவம்பர் 9ம் தேதி அளிக்க உள்ள விபரங்கள்
உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் தோழியர் குணசுந்தரி அவர்கள்
கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
தோழர் லோகநாதன்
திருநின்றவூர் செயலாளர்
No comments:
Post a Comment