வருந்துகிறோம்.
குரோம்பேட்டை கிளையின் உறுப்பினரும் ஒய்வு பெற்ற சென்னை தொலைபேசி துணை பொது மேலாளருமான திரு . S . மதுசூதனன் அவர்கள் இன்று 20-10-2019 காலை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கிறோம்.மறைந்த அன்னாரின் ஆன்மா சாந்தியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..
அவரின் மறைவால் வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு மதுசூதனனின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும். எனவே இறுதி சடங்குகள் அநேகமாக செவ்வாய் அன்று காலை நடைபெறலாம்.
நாளை (21-10-2019)காலை 11-30 மணி அளவில் நம் சங்கம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக அன்னாருக்கு இறுதி மரியாதைகள் அவரது இல்லத்தில் செய்யப்படும் .
அவரது இல்ல முகவரி
1. திருமங்கை மன்னன் தெரு,
( ஸ்ரீ வேங்கட முடயான் கோவில் சமீபம் )
சிட்லபாக்கம்
சென்னை -- 64
தொலைபேசி எண் : 2223 7979
No comments:
Post a Comment