AIBSNL PWA செங்கல்பட்டில் 29.10.2019 அன்று
மாலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை தோழர் M. ரங்கநாதன் கிளை தலைவர் தலைமையில்
மிக சிறப்பாக நடைபெற்றது. கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர்
சத்தியமூர்த்தியும், ஆழ்துளையில் தவறி விழுந்த சிறுவன்
சுர்ஜீத் ஆகியோரின் மறைவிற்கு இரண்டுநிமிடம் அஞ்சலி செலூத்தப்பட்டது கிளை
செயலாளர் சொ. ஒளி வரவேற்புரை
நிகழ்த்தினார். அவர் தொடர்ந்து கிளை
உறுப்பினர்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்னர்
10 புதிய
உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். 87 பேர்
உறுப்பினர்கள் திரலாக கலந்து கொண்ட
இந்த கூட்டத்தில் தோழர்
S. தங்கராஜ் மாநில செயலாளர், தோழர்
S.கிருஷ்ணமூர்த்தி மாநில உதவி செயலாளர்,
தோழர் V. வள்ளிநாயகம் மாநில உதவி தலைவர்,
தோழர் R மாரிமுத்து குரோம்பேட்டை
கிளை செயலாளர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் வள்ளிநாயகம் உரையில் மாநில மாநாடு
மற்றும் பென்ஷன் மாற்றம், புதிய
உறுப்பினர் சேர்க்கை ஆகியவற்றை விளக்கினார். தோழர் கிஷ்ணமூர்த்தி அவர்கள்
MRS திட்டத்திலிருந்து
CGHS மருத்துவ திட்டத்திற்கு BSNL ஓய்வூதியர்கள் செல்ல வேண்டிய நிலைமை
உள்ளதை விவரமாக விளக்கினார். தோழர் S. தங்கராஜ்
மாநிலசெயலாளர் அனைத்து பிரச்சினைகளையும் சிறப்பாக
எடுத்துரைத்தார். கிளை சார்பாக மாநில
மாநாட்டிற்கு ரூபாய் 5000/மும்,பிரதமர் நிதியுதவி
ருபாய் 4000/ம் மாநில செயலாளரிடம்
வழங்கப்பட்டது.
கிளை செயலாளர் சொ. ஒளி நன்றி
உரையுடன் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment