அன்புத்தோழர்களே,
சமீபத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பெய்த கன மழை காரணமாக எல்லா மாநிலங்களும் தண்ணீரில் மிதக்கக்கூடிய நிலை. அன்றாடம் வேலை செய்து வாழும் ஏழைத் தொழிலாளிகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . முக்கியமாக ஆஸ்பத்திரிகளுக்குக்கூட போக முடியாத அவலம்.
துயரில் வாடும் மக்களின் கண்ணிரைத் துடைப்பது சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு வரும் நம் ஓய்வு ஊதியர்களின் தலையாய கடமையாகும். நம் அகில இந்திய சங்கமும் நிதி வசூல் செய்து நம் பிரதம அமைச்சரின் பேரிடர் நிதிக்கு அளிக்க எண்ணியுள்ளனர். இது குறித்த வேண்டுகோள் நம் பொது செயலர் மற்றும் அகில இந்திய தலைவர் ஆகியோர் விடுத்தள்ளதை இத்துடன் இணைத்துள்ளேன்.
நம் மாவட்ட ஓய்வூதியர்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டுகிறோம்.
ஒவ்வொரு கிளையும் குறைந்த பட்சம் ரூபாய் 4000 /- உறுப்பினர்களிடம் இருந்து வசூலித்து நம் மாநிலப்பொருளாளர் தோழர் எம். கண்ணப்பன் அவர்களிடம் இம்மாத இறுதிக்கு முன்பாக அளித்திட வேண்டுகிறோம்.
தவித்து நிற்கும் உள்ளங்களுக்கு
உறுதுணையாய் நின்று உதவுவோம்.
விழி நீரைத் துடைத்து
புது வாழ்வு அமைத்துத் தந்திடுவோம்.
No comments:
Post a Comment