Sunday, 22 September 2019

AIBSNLPWA ChTD CIRCLE காஞ்சிபுரம் கிளையின் மாதாந்திர சங்க கூட்டம் தலைவர் தோழர் A. முனுசாமி தலைமையில் 17-09-2019 அன்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

கிளை செயலாளர் தோழர் M. முனுசாமி, பொருளாளர் தோழர் V. ஜெயராமன்மாநில செயலாளர் தோழர் தங்கராஜ்  மற்றும்  இந்த கிளையின் மாநில பொறுப்பாளர்கள் தோழர் சீனிவாசன், தோழர் ரங்கநாதன், தோழர் ரவிக்குமார்,  மேலும் குரோம்பேட்டை கிளை செயலாளர் தோழர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் நமது சங்கத்தின்  சாதனைகள் முக்கியமாக 60:40 நீக்கம், 7வது மத்திய சம்பள ஊதியகுழுவின் அடிப்படையில் நமது BSNL  பென்ஷனர்களின் பென்ஷன் மாற்றம் தவிர தற்போது BSNL MRS ல் இருந்து CGHS  மருத்துவ திட்டம் மாறுதலுக்கான வழிமுறைகள் ஆகியன கூட்டத்தில் விபரமாக தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் நமது மாநில செயலாளர் தோழர் தங்கரராஜ் அவர்களுக்கும் காஞ்சிபுரம் கிளையின் உறுப்பினர் தோழியர் அனுராதா அவர்களுக்கும் "இனிய பிறந்தநாள்" வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. 
40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இக்கூட்டத்தில்  பங்கு பெற்றார்கள். 
தோழியர் அனுராதா நன்றியுரை நவில கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment