Friday, 26 July 2019

25-07-2019 அன்று சென்னையில் மத்திய சங்க செயலக கூட்டம் நடைபெற்றது. மத்திய சங்க தலைவர் தோழர் ராமன்குட்டி , பொதுசெயலர் தோழர் கங்காதர ராவ் , பொருளாளர் தோழர் விட்டோபன், துணை தலைவர்கள் தோழர் கோபாலகிருஷ்ணன் , நடராஜன் ,  சுகுமாரன் , துணைப்பொதுசெயலர்கள் தோழர் முத்தியாலு மற்றும் தோழர் வரப்பிரசாத் , உதவி பொது செயலர் தோழியர் ரத்னா , உதவி பொருளாளர் தோழர் ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் வெங்கடாச்சலம் , சென்னை மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் ஆகியோர்
கலந்துகொண்டனர் .
 அதுபோழ்து நம் ஓய்வூதியர் பிரச்சினைகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன . நம்முடைய பிரதான கோரிக்கையான மத்திய ஏழாவது சம்பள குழு  பரிந்துரைகளின் அடிப்படையில்  ஓய்வூதிய மாற்றம் அடைந்திட எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . 
அந்த விபரங்கள் விரைவில் மத்திய சங்க அறிக்கை மூலம் வெளி வரும்.


No comments:

Post a Comment