Friday, 28 June 2019

சென்னை தொலைபேசி மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 10 00 மணி அளவில் ஜீவன ஜோதி மினி ஹாலில் மாநில தலைவர் தோழர் முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் இயற்கை எய்தியவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில செயலர் தோழர் தங்கராஜ் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று பேசினார்.இம்மாதம் நடைபெற்ற பென்ஷன் அதாலத்தில் 3 கேஸ்கள் கொடுக்கப்பட்டன அவற்றில் இரண்டுக்கு முடிவு கிடைத்தது. ஒரு கேஸ் மட்டும் பாக்கி உள்ளது. சென்னை மாநிலத்தில் 14 கிளைகள் உள்ளன அதில் அண்ணாரோடு கிளை மட்டும் இயங்காமல் உள்ளது. மற்ற 13 கிளைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன. சமீப காலங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் சிறு சுணக்கம் இருப்பதாக உணருகிறேன் .ஒய்வு பெற இருக்கிற தோழர்களை அவர்கள் பணியில் இருக்கும் காலங்களிலேயே போய் சந்தித்து நம் சாதனைகளை எடுத்துக்கூறி அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கிளை செயலர்கள் சற்று கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். இன்னும் சில கிளைகளை உருவாக்க வேண்டும். நங்கநல்லூர் கிளை உதயமாக உள்ளது. அதற்கான முயற்சிகளை தோழர் னந்தன் மேற்கொண்டு வருகிறார் .ஒதிஷாவை தாக்கிய பானி புயல் நிவாரண நிதி திரட்டி வைத்திருக்கும் கிளைகள் உடனடியாக அவற்றை அனுப்பி வைக்க வேண்டும். நமது மாநில ஆறாவது மாநாடு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
பின்னர் பேசிய மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் இந்த செயற்குழு கூட்டம் துவங்குவதற்கு முன் நம் மாநில உறுப்பினர் எண்ணிக்கையை 4000 ஆக உயர்த்த எண்ணினோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம் . ஒய்வு பெற இருக்கும் தோழர்களின் விவரங்களை மிகவும் கஷ்டப்பட்டு பெற்று அனைத்து கிளை செயலர்களிடம் கொடுத்தேன் .ஆனால் தற்சமயம் நம் மாநில உறுப்பினர் எண்ணிக்கை 3986 . இது மென்மேலும் பெருக அனைத்து உறுப்பினர்களும் முயல வேண்டும். சென்ற முறை நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு நான்கு லக்ஷம் செலவானது. இப்போது நடைபெற இருக்கும்  மாநில மாநாட்டிற்கு  குறைந்தது ஐந்து லக்ஷமமாவது ஆகும் . இதை நம் உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடையாக பெறவேண்டும். சார்பாளர் கட்டணம் வசுல் செய்வதன் மூலம் சுமார் ஒண்ணரை லக்ஷம் திரட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம். தணிக்கை செய்யப்படாத வரவு செலவு அறிக்கையினை மாநில பொருளாளர் தாக்கல் செய்தார். சிறு விளக்கங்களுக்குப்பின் அவையினரால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
AIFPA சங்க பொருளாளர் தோழர் சுந்தர் உரையாற்றினார் , சங்க பணிகளை விவரித்தார் .நடக்க இருக்கும் மாநில மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் இரண்டாயிரம் அளித்தார்.
மத்திய சங்க உதவி தலைவர் , முன்னாள் பொது செயலர் தோழர் ஜி.நடராஜன் உரையாற்றினார் .35 உறுப்பினர்களுடன் சைதாப்பேட்டையில் துவங்கப்பட்ட நம் சென்னை மாநில சங்கம் இன்று 3986 உறுப்பினர்களைக் கொண்டு வீறு நடை போடுகிறது. நம் சங்கம் 22  மாநிலங்களில்  சுமார்  85000  உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
பிறகு 12 கிளை செயலர்கள் தங்கள் கிளை வளர்ச்சி குறித்து பேசினார்கள் . அனைத்து கிளை செயலர்களும் மாநில மாநாடு இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்கள்.
அகில இந்திய உதவி பொது செயலர் தோழியர் ரத்னா உரையாற்றினார் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நமக்கு நம் சங்கம் நிச்சயம் பெற்றுத்தரும் என்றார். கோர்ட்களில் நடைபெறும் வழக்குகள் முடிவுர  மிக நீண்ட காலம் பிடிக்கின்றன . என் கருத்து என்னவென்றால் கோர்ட்க்கு போகாமலேயே நம் கோரிக்கைகளை வென்று பெற வேண்டும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சைதாப்பேட்டை கிளைசெயலர் தோழர் வீரபத்திரன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் .
உறுப்பினர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப கிளை செயலர்கள்செயல்பட வேண்டும்.
parent கிளைகளிலிருந்து புதிய சென்றுள்ள உறுப்பினர் பெயர்களை parent கிளை data base லிருந்து நீக்கி விடவேண்டும் என்று மாநில தலைவர் வலியுறுத்தனார்.
மற்றும் செயற்குழு கூட்டத்தில் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் M .கோவிந்தராஜன் , M .மூர்த்தி M .அரங்கநாதன் S .கிருஷ்ணமூர்த்தி,D .டொமினிக் G ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் .
அகில இந்திய சங்கத்திற்கு கொடுக்கப்பட்ட பிரச்சினைகள் தீர்ப்பது சம்பந்தமாக மாநில சங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மாநில மாநாட்டினை இரண்டு நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாநில மாநாடு நடத்துவதற்கான இடம் ,மற்ற செயல்பாடுகளை தீர்மானிக்க 6 கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
 விரைவில் அவர்கள் கூடிப்பேசி மாநில மாநாட்டினை எவ்விதம் நடத்தலாம் , எவ்வளவு செலவாகும்? அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்க உள்ளார்கள் 
அந்த குழுவின் உறுப்பினர்கள் தோழர்கள் கண்ணப்பன் மாநில பொருளாளர், ரங்கநாதன் மாநில உதவி செயலர், கிருஷ்ணமூர்த்தி மாநில உதவி செயலர் , வைத்தியநாதன் , வில்லிவாக்கம் கிளை செயலர், சாம்பசிவம் , கோடம்பாக்கம் கிளை செயலர் மற்றும் மாரிமுத்து , குரோம்பேட்டை கிளை செயலர். குழுவின் அரும்பணி வெற்றிபெற வாழ்த்துக்கள் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற ஏற்ற ஆலோசனைகளை வழங்க வில்லிவாக்கம் , கோடம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை கிளைகளை மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது .
சார்பாளர் கட்டணமாக ரூபாய் 400 /- நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மாநில மாநாட்டை நடத்துவதற்கு வரவேற்பு குழு உறுப்பினர்களாக மாநில சங்க நிர்வாகிகள் ,கிளைச செயலர்கள் , கிளைத்  தலைவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மாநில மாநாடு சம்பந்தமாக மீண்டும் விரைவில் மாநில செயலக கூட்டத்தில் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
மாநில சங்கத்தின் சார்பாக மத்திய செயற்குழு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு , மத்திய சங்கத்திற்கு மீண்டும் நினைவூட்டு கடிதம் ( Reminder ) கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .
அண்ணா சாலை கிளையை செயல்படுத்துவதற்கு மாநில சங்கம் முயலும்..
இறுதியில் தோழர் அக்ஷய குமார் மாநில துணை செயலர் நன்றி நவில செயற்குழு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.


Click HERE to see other Photos












































No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...