Thursday 30 May 2019


(S-12-க்கு ரூ 6500 - 105 00 சம்பள விகிதம்)
6வது ஊதியக் குழு தனது அறிக்கையை குறிப்பிட்ட காலத்தில் சமர்பித்தது. மத்திய சேவையில் பலதரப்பட்ட கேடர்களின் இயற்கைத் தன்மை  மற்றும் பொறுப்புகளை கவனத்தில் கொள்ளாமல் 6-வது ஊதியக் குழுவில் ஓய்வு பெற்ற நீதியரசர்B.N.கிருஷ்ணா தலைமையிலான குழு சம்பள விகிதங்களை பரிந்துரை செய்தது.
அதனையொட்டி  அவர்கள் ஒரு சிறிய சம்பள அளவீட்டை நிர்ணயம் செய்தார்கள் .
அதாவது 31.12.2005 ல் அடிப்படை சம்பளம்  மற்றும் பஞ்சபடி  ஆகியவற்றை  கூட்டி  அதன் மூலம்  கிரேடு  சம்பளம்   ( GRADE PAY) என்ற புதிய விகிதத்தை  அமல்படுத்தினார்கள்

அதே சமயம் ஓய்வூதியர்களுக்கு 6-வது சம்பளக்குழு  40 சத வீத  அடிப்படை பென்சனாக ,சராசரியான சலுகையாக  அறிவித்தது .

 
இதன் மூலம் ரூ.5000 அடிப்படை சம்பளம் பெறும் பணியில் உள்ள
 
ஊழியர்க்கு ரூ.4200- (84% அடிப்படை சம்பளம்) கிரேடு சம்பளமாக உயர்த்தி அதனுடன் வீட்டு வாடகைப்படி மற்றும் இதர படிகளுக்கு ஏற்ற உயர்வுகளையும் கூடுதலாக பெற வழி ஏற்பட்டது.

அடிப்படை பென்சனாக ரூ.5000/- பெறும் பென்சனருக்கு ரூ.2000/- மட்டுமே உயர்வு கிடைத்தது. இது ஓய்வூதியர்களுக்கு 6-வது சம்பளக்குழு அளித்த கொடூரமான அநீதி.

     6500-10500
சம்பள அளவீட்டிற்கு முதலில் ரூ.4200/- தான் கிரேடு
 
சம்பளமாக தந்தார்கள். பிறகு 13-11-2009 அன்று நிதியமைச்சகம்
வெளியிட்ட உத்தரவு மூலம் அந்த கிரேடு சம்பளம் ரூ.4600/- ஆக உயர்த்தப்பட்டது,
ஆனால், 2017-ல் 7-வது சம்பளக் குழுவின் படி பென்சன் மாற்றம்
எனும் போது, பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை ரூ.6500-10500
 
சம்பள விகிதத்திற்கு இணக்கமான அட்டவனை தயாரித்த போது,
கிரேடு சம்பளமாக ரூ.4200/-தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

உடனடியாக இதை நமது AIBSNLPWA சங்கம் குறிப்பிட்டு, பாரத பென்சனர் சமாஜ் மூலம் பிரச்சனையை தந்தது - SCOVA அமைப்பில் உறுப்பினராக உள்ள கர்நாடக P&Tபென்சனர் அமைப்பும் இப்பிரச்சனையை எழுப்பியது. தங்களுடைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் செய்ய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை முன்வரவில்லை.

இதனால் பாதிப்புக்கு உள்ளான சில பென்சனர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT)  சென்றனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த CAT, மாற்றப்பட்ட கிரேடு சம்பளமான ரூ.4600/- வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

தற்போது, செலவின மற்றும் நிதியமைச்சக துறை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறையும் அட்டவணை 24 & 25 களை மாற்றி சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க உள்ளது. அதன் பிறகே,01.01.2016 முதல் பென்சன் மாற்றம் செய்ய CCA முன் வரும்.

இச் சலுகை யாருக்கு கிடைக்கும்?
கிரேடு - IV பதவியிலிருந்து பணி ஓய்வு பெற்ற DOTபென்சனர்கள் பலனடைவார்கள். அக்டோபர் - 1990-க்கு முன்பாக மிகச் சிலரே டெலிகாம் துறையில் இந்த கிரேடு -IV -ல் இருந்தனர் (சம்பள விகித ரூ.2000 - 3200 & 2000 - 3500).-
1990-
ல் BCR அறிமுகப்படுத்தப்பட்டது . கிரேடு - III-ல் உள்ள 10 சதவீதத்தினர் கிரேடு - I V-க்கு அமர்த்தப்பட்டனர். பிறகு 01-01-1996 முதல் அவர்கள் 6500 - 10500 சம்பள விகிதம் பெற்றனர். 01.10.2000-க்கு முன்பாக கிரேடு -IV - லிருந்து ஓய்வு பெற்றவர்களும் தற்போது அவர்களின் பென்சனில் இந்த உயர்வு பெறுவர்.பென்சன் மற்றும் பென்சன் நலத்துறை இந்த மாற்றப்பட்ட அட்டவனையை வெளியிட்ட பிறகு, உரிய பென்சனர்கள் அவரவர் CCA-க்களிடம் உரிய ஆவணங்களோடு மனுச் செய்ய வேண்டும்.
குறிப்பு :
01.10.2000-
க்கு பின் ஓய்வு பெற்ற BSNL ஊழியருக்கு மேற்கண்டவை பொருந்தாது. ஏனென்றால் அப்போது BSNL -ல் கிரேடு சம்பளம் நடைமுறையில் இல்லை.

நன்றி :
மத்திய சங்க செய்தி:
 
தமிழாக்கம் = .அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி


No comments:

Post a Comment

 " KYP "  SUBMISSION NOTIFICATION: