Friday, 10 May 2019


தோழர்களே 08-05-2019 புதன்கிழமை சென்னை தொலைபேசி மாநிலத்தின் திருநின்றவூர் கிளையின் கூட்டம் கிளையின் தலைவர் திரு வீராசாமி அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
சென்னை தொலைபேசி மாநிலசெயலாளர்  தோழர் தங்கராஜ், மாநில உதவி செயலாளர்கள் தோழர் அட்சயகுமார், தோழர் ஜீவானந்தம், தோழர் சுப்ரமணியம் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிளையின் ஆயுள் உறுப்பினர்கள் மேற்படி கூட்டத்தில் பங்கு பெற்றார்கள்.
திருநின்றவூர் கிளையின் செயலாளர் தோழர் லோகநாதன் கிளையின் தற்போதைய அமைப்பு  நிலை, உறுப்பினர் எண்ணிக்கை, இன்னமும் நமது கிளையின் ஆயுள் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அனைவரையும் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்தார்.
மாநில உதவி செயலாளர் தோழர் ஜீவானந்தம் அவர்கள் தற்போதிய BSNLன் நிதி நிலமை, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாத சம்பளம் தாமதமாக வழங்கப்பட்டது, வருகின்ற காலத்தில் பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையும், BSNLல் நிறுவனத்தை தனியார் மயமாக்கலாக செய்து வரும் நடவடிக்கைகளையும் விளக்கமாக பதிவு செய்தார்.

மாநில உதவி செயலாளர் தோழர் அட்சயகுமார் தற்போது பணி ஓய்வு பெறும் அன்பர்களை நமது சங்கத்தில் இணைப்பதுடன், ஏற்கனவே பணி ஓய்வு பெற்ற அன்பர்களையும் நமது சங்கத்தில் இணைக்க அனைவரும் பாடுபடும்படி அறிவுறுத்தினார். தவிரவும் நமது உறுப்பினர்களின் உடல் ஆரோக்யம் பற்றி மிகவும் சிறப்பாக பல ஆலோசனைகளையும் வழங்கினார்.

மாநில உதவி செயலாளர்  தோழர் சுப்ரமணியம் தற்போது DOT CCA ஆபிசில் பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றவர்களுக்கு நேரடியாக ஓய்வூதியம் வழங்குகின்ற நடைமுறை அமலாக்கப்பட்ட விவரம், அவர்களுக்கு நமக்கு வழங்கப்பட்டது போல பென்ஷன் புத்தகம் வழங்கப்படாது எனற விவரங்களும் எடுத்துரைத்தார்.
மாநிலசெயலாளர்  தோழர் தங்கராஜ் அவர்கள் தற்போது சென்னை தொலைபேசி மாநிலத்தின் ஆயுள் உறுப்பினர்கள் 3900 எண்ணிக்கையை தாண்டிய விபரம், அகில இந்திய அளவில் ஆயுள் உறுப்பினர்கள் 45000 எண்ணிக்கையை தாண்டிய விபரம், தற்போது நமது பென்ஷன் மாற்றம் 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாற்றி அமைக்க எடுக்கப்பட்டு வரும் விவரங்களும் எடுத்துரைத்தார்.
கிளையின்  பொருளாளர் தோழர் சீனிவாசன் நன்றியுரையுடன் இந்த கூட்டம் இனிதே நிறைவு அடைந்தது.
இங்கனம்
தோழர் லோகநாதன்
திருநின்றவூர் கிளை செயலாளர்.


No comments:

Post a Comment

  On March 6, 2025, a delegation from AIBSNLPWA led by General Secretary Shri V. Vara Prasad, Vice President Shri R. S. N. Murthy, and Visak...