அனைத்து இந்திய
BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர்
கிளையின் பொதுக்குழு கூட்டம் 9-2-19 அன்று தலைவர் தோழர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. மறைந்த கிளையின் உறுப்பினர் M.சேகர், முன்னால் அமைச்சர் தொழிற்சங்க தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் postal RMS ஐ சார்ந்த சோமு
ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் தன் உரையில் கொருக்கை கிராமத்தில் கட்டிகொடுக்கவிருக்கும் பள்ளிக்கு அதிக அளவில் நன்கொடை வழங்க கேட்டுக்கொண்டார். கிளை செய்லர் B.தியாகராஜன் CPMS, SAMPAAN குறித்து பேசினார். அண்ணா நகர் கிளை செய்லர் தோழர் சம்பத்குமார், அகில இந்திய சங்க துணைத்தலைவர் தோழர் G.நடராஜன் ஆகியோர் சால்வை அனிவித்து கவுரவிக்கப்பட்டனர். அ.இ.து.தலைவர் நமது சங்கம் தொடங்கியது முதல் இன்றுவரை அதன் வளர்ச்சி செயல்பாடு மற்றும் பென்சன் மாற்றியமைத்தல் CGEHS மெடிக்கல்
சம்பந்தமாக விரிவாக உரையாற்றினார். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 45 தபால் அட்டை எழுதி கையொப்பம் பெற்று அனுப்பப்பெற்றது. கி.து.செ.G.அரி நன்றி நவில கூட்டம் முடிவுற்றது. இதுவரை 75 தபால் அட்டைகள் அனுப்ப பட்டுள்ளன.
B.தியாகராஜன். கி.செயலர் அம்பத்தூர்.
No comments:
Post a Comment