ஒரே ஒரு கிளை செயலர் தவிர அத்துணை கிளை செயலர்கள் கலந்து கொண்டு தத்தம் கிளைகளின் வளர்ச்சி, அன்றாட செயல்பாடுகள் , தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் , புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து மிக உணர்ச்சி மிகு உரை ஆற்றினார்கள். வில்லிவாக்கம் செயலர் தமது உரையில் இனி வரும் செயற்கூட்டங்களை சனிக்கிழமை அல்லது ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடத்தினால் தம்மால் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையை இலவசமாக பெற்றுத்தர ஏற்பாடு செய்ய முடியும் என கூறியதை சபை ஆரவார கைத்தட்டல்களுடன் ஏற்றுக்கொண்டது. கூட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா செயலர்களும் நேரக்கட்டுப்பாடின்றி விரிவாக பேசினார்கள்.
மதியம் அனைவருக்கும் சுவைமிகு உணவு பரிமாறப்பட்டது. பிறகு மீண்டும் கூடிய நிகழ்ச்சியில் தமிழ் மாநில செயலர் தோழர் ஆர்வி மிக அருமையாக உரையாற்றினார். ஓய்வூதிய மாற்றம் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டினார். தமிழ் மாநில சங்கமும் , சென்னை தொலைபேசி மாநில சங்கமும் ஒன்றாக இணைந்து செயல்படும் என்றும் எல்லைக்கோடுகளால் நாம் இரு சங்கங்களாக செயல்பட்டாலும் ஒரே எண்ணம் அது ஓய்வூதியர் நலம் எனும் புள்ளியில் நாம் கூடி பாடுபடுகிறோம். என்றார்.
இனி கூடும் செயற்குழு கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 3 மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல் நாம் செயற்கூட்டத்தை கூட்டி நம் சங்க செயல்பாடுகளை விவாதித்து வருகிறோம். இது ஐந்தாவது செயற்குழு கூட்டம் என்று மாநில செயலர் தோழர் தங்கராஜ் அவர்கள் கூறினார்கள். மாலை 5-30 மணிக்கு நன்றி நவிலலுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது .
வாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை! வளர்க சங்க செயல்பாடுகள்!! வாழ்க AIBSNLPWA !!!
இனி மற்ற அனைத்து படங்களை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
CLICK THIS LINK TO SEE ALL PHOTOS
,
No comments:
Post a Comment