Monday, 12 November 2018

இரங்கல் கூட்டம்.
தோழர்களே /தோழியர்களே,
நம் ஓய்வூதியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு பெற்றிட,  துயர் தந்த 60:40 விகிதத்தை தகர்த்திட பேருதவி புரிந்தவரும், இன்னும் ஏழாவது சம்பள குழுவின் ஓய்வூதிய பரிந்துரைகளை நமக்கும் அளித்திட நாம் முன் வைத்திருக்கும் கோரிக்கைளை ஏற்று நமக்கு உதவி புரிவதாக கூறியிருந்த மத்திய ரசாயன மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் மாண்புமிகு னந்தகுமார்  அவர்கள் அகால மரணமடைந்தது நமக்கெல்லாம் பேரிழப்பாக உள்ளது.
அவர் மறைவுக்கு அஞ்சலி செய்யும் முகத்தான் ஒரு அஞ்சலி கூட்டம் நம் சங்கத்தின் நங்கநல்லூர் அலுவலகத்தில் இன்று ( திங்கள் கிழமை )  12-11-2018 மாலை 4-30 மணி அளவில் நடைபெறும். அது சமயம் சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து மத்திய , மாநில ,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். மற்ற அனைவரையும் வந்து கலந்து கொண்டு மறைந்த அமைச்சருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி செலுத்த அழைக்கிறோம்.
முகவரி " மூகாம்பிகை பிளாட்ஸ் ",  பாரதியார் தெரு , நங்கநல்லூர்.       
( பவழந்தாங்கள்  ரயில் நிலையம் அருகில்.)
அகில இந்திய துணைப்பொது செயலர் ,மாநில செயலர் 
மற்றும் சங்க நிவாகிகள்.
சென்னை.

No comments:

Post a Comment

  தோழர்களே , அனைவருக்கும் வணக்கம். இம்மாதம் அதாவது ஜனவரி 2025 ,31 ஆம் தேதியுடன் முடிவடைகின்ற உயிர் வாழ் சான்று ( Life Certificate ) பட்டியல்...