27-10-2018 அன்று மாலை 4-00 மணி அளவில் செங்கல்பட்டு கிளை AIBSNLPWA சங்க இரு மாத ஒரு முறை கூட்டம் வேணு மஹாலில் நடைபெற்றது. கிளை தலைவர் ரங்கநாதன் அவர்கள் தலைமை ஏற்றார் . அவர் தமது தலைமை உரையில் சமீபத்தில் ஒதிஷா மாநிலம் புரியில் நிறைவடைந்த அனைத்திந்திய மாநாட்டு நிகழ்வுகளை மிக அருமையாக தொகுத்து வழங்கினார். கிளை செயலர் , செயல் வீரர் தோழர் C .ஒளி அவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார். தமது வரவேற்புரையில் செங்கல்பட்டு கிளை சங்க வளர்ச்சியினை விவரித்தார். 78 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கிளை தற்சமயம் 200 உறுப்பினர்களை ( அனைவருமே ஆயுட்கால உறுப்பினர்கள் ) தன்னுள்ளே கொண்டு வீறு நடை போடுவதாக பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தெரிவித்தார். மேலும் இம்மாவட்ட கிளைக்கு PAN கார்டு பெறப்பட்டு செங்கை இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கி உள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சென்னை தொலைபேசி மாநில மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் G .நடராஜன் அகில இந்திய உதவி தலைவர் , அகில இந்திய பொருளாளர் தோழர் T.S.விட்டோபன் ,இணைய தள இயக்குனர் தோழர் மோகன் ,புதிதாக இணைந்துள்ள தோழர் குணசேகரன்( DGM ஒய்வு) ஆகியோர் கைத்தறி துண்டு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட சங்க செயல்பாடுகள் , தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் , பயனாளர்கள் பெயர்கள் , நிலுவையில் உள்ள பிரச்சினைகள் அதற்கான விவரங்கள் ஆகியவைகளை செயலர் விவரித்தார். பயன் பெற்ற அனைத்து பயனாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி மிகவும் உள்ளம் கவருவதற்காக இருந்தது.
CHTD மாநில உதவி செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேலதிகாரிகளிடம் விவாதித்து நிலுவைத்தொகை பெற்றுத்தந்த நான்கு பயனாளிகள் பெயர்களை கூறினார்கள். நவம்பர் 22 அன்று நடைபெற உள்ள உண்ணா நோன்பு போராட்டத்திற்கு மிக அதிக உறுப்பினர்கள் கலந்து கொண்டு காலை மணி 10-00 முதல் மாலை 5-00 மணி வரை உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
மாநில துணைத்தலைவர் தோழர் வள்ளிநாயகம் மற்றும் சமீபத்தில் ஒய்வு பெற்று இணைந்துள்ள தோழர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
முன்னாள் பொதுசசெயலர் தோழர் நடராஜன் மற்றும் அகில இந்திய பொருளாளர் தோழர் விட்டோபன் ஆகியோர் நம் சங்க வரலாறு, பெற்ற வெற்றிகள் , சந்தித்த எதிர் வினை இடர்பாடுகள் ஆகியவைகள் குறித்து விவரித்தார்கள் . உறுப்பினர் எண்ணிக்கை இன்னமும் உயர வேண்டும் நம் சங்க கோரிக்கையான Each One Carry Two என்பதை மிகவும் வலியுறுத்தினார்கள்.
சுமார் 114 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டம் கிளை மாநாடு போல சிறப்பாக நடைபெற்றது தடையில்லா மின்சாரம், தொல்லை தரா ஒலிப்பெருக்கி ஒரு கூடுதல் பாராட்டு பெறுகிறது.
கூட்டத்தில் 116 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
We are retired but not Tired என்கிற கூற்றினை வலிய வலியுறுத்தியது.

Photo session inconclusive.
No comments:
Post a Comment