Wednesday, 24 April 2024

Circle Executive Committee Meeting of ChTD  was conducted on 23-04-2024 in Jivana Jyoti Hall, Egmore in a grand manner. In spite of Chitra Pournamy festival on that day, many of our executive members attended the meeting.A detailed report is posted below. 

சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம்.
23.04.2024 அன்று மாநில செயற்குழு கூட்டம் தோழர். M.முனுசாமி மா.தலைவர் அவர்கள் தலைமையில் ஜீவன ஜோதி ஹால் எழும்பூரில்
சிறப்பாக நடைபெற்றது.
மறைந்த தோழர் V.N.சம்பத் குமார் சுதந்திர போராட்ட வீரர்,
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் N.சங்கரய்யா அவரது
மறைவு,  நடிகரும் தேசீய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவர்
திரு.விஜயகாந்த் அவரது மறைவு மற்றும் இயற்கை சீற்றங்களால்
உயிரிழந்த அனைவருக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தோழர் M.முனுசாமி மா.தலைவர் தலைமை உரை ஆற்றினார்
தோழர் S.தங்கராஜ் மா.செயலர் அனைவரையும் வரவேற்று , மாநில சங்க செயல்பாடுகள் கிளைகளின் செயல்பாடுகள் குறித்த  தகவல்களை தெரிவித்தார். கடந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுல்படுத்தப்பட்டுள்து.
பல்வேறு பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. நமது மாநிலத்தில் உள்ள  குரோம்பேட் கிளை தவிர மற்ற கிளைகளில் கிளைகூட்டங்கள் நடைபெற்று வருகிறன. குரோம்பேட் கிளையின் கூட்டத்தை நடத்துவதற்கு மாநில செயற்குழு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.
06.02.2024 அன்று பூந்தமல்லி கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
26.02.2024 அன்று மாதவரம் கிளையின் ஆண்டு பொதுக்குழு  கூட்டம் மற்றும் சர்வதேச மகளிர் தின விழா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
30.03.2024 அன்று காஞ்சிபுரம் கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 
சிறப்பாக நடைபெற்றது. நாம் பிரச்சனைகளை அவ்வப்போது சம்பந்தப்பட்ட  DOT  அதிகாரிகளுடன் பேசி தீர்த்து வருகின்றோம்.
வழக்கு நிதி வழங்குவோர் கிளைசங்கம் மூலமாக
அகில இந்திய  சங்கத்திற்கு அனுப்பிய தகவல்களை மாநில சங்கத்திற்கு  தெரிவிக்கவேண்டும்.
தோழர் M.முனுசாமி மா.தலைவர் வழக்கு நிதி வழங்கிய அனைவரையும் பாராட்டி நமது அமைப்பின் மீதுள்ள நம்பிக்கையை 
புரிந்து கொள்ள முடிகிறது என்றார். மாற்று சங்க அமைப்பினரும் தாராளமாக வழங்கியது பாராட்ட தக்கது. 
தோழர். M.முனுசாமி. கி.செ.காஞ்சிபுரம்.
கிளையின் செயல்பாடுகள் 30.03.2024 நடைபெற்ற கிளை மாநாடு மற்றும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் பற்றி தெரிவித்தார்.
வழக்கு நிதியாக. ₹.40700/ வழங்கப்பட்டது.
தோழர். P.கங்காதரன்.கி.தலைவர். வில்லிவாக்கம்.
வில்லிவாக்கம் கிளையின் மாநாட்டை நடத்தி வரவு செலவு கணக்கு விரைவில் வழங்கப்படும். வழக்கு நிதியாக  ₹.1,10,757/- வழங்கப்பட்டுள்ளது.
தோழர்  A.இஸ்மாயில்.கி.தலைவர், அம்பத்தூர்.ஆண்டு வரவு செலவு கணக்கு மற்றும் கிளைசெயல்பாடுகள் பற்றியும் வழக்கு நிதியாக 
₹ 36300/- வழங்கப்பட்டுள்ளது.
தோழர். C.ஒளி.கி.செயலர். செங்கல்பட்டு. கிராம புறங்கல் அதிகமாக உள்ளன  உறுப்பினர்களிடம் நன்கொடை பெற்று விரைவில் வழக்கு நிதி வழங்கப்படும். தபால் அலுவலகத்தில் இருந்து Migrate ஆனதில் Data சரியாக இல்லாததால் பிரச்சனைகள் உள்ளது. June மாதம் கிளை மாநாடு நடைபெறும்.
தோழர். T.பிச்சைமோகன்ராஜ். கி.செயலர்.கல்மண்டபம்.
வழக்கு நிதி இதுவரை வழங்கவில்லை.செப்டம்பர் மாதம் கிளை மாநாடு நடைபெறும். 
தோழர். C.நடராஜன். கி.செயலர்.திருத்த ணி. விரைவில் கிளையின் மாநாடு நடைபெறும். வழக்கு நிதியாக ₹.20000/ வழங்கப்பட்டது.
FMA  பிரச்சனையை தீர்க்க வேண்டும். CGHS  கார்டில் IPD or OPD
என்பதில் பிரச்சனை உள்ளது.
தோழர். M.தேவேந்திரன். கி.செயலாளர். மாதவரம் . உறுப்பினர்கள் பட்டியலில் பிரச்சனை உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும்.கிளை மாநாட்டை நடத்தி கல்வெட்டு அமைக்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார். வட சென்னை பகுதிகளில் சரியான CGHS மருத்துவமனைகள் இல்லை.ஆவன செய்ய வேண்டும் என்றார்.
வழக்கு நிதியாக ₹.14,200/ வழங்கப்பட்டது.
தோழர். G.வீரபத்திரன்.கி.செயலர்.சைதாப்பேட்டை.
கிளை மாநாடு 28.04.2024 அன்று நடைபெறும். அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொண்டார். K K நகர் W / C பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. MIOT  மருத்துவ மனையை
CGHS சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும். One increement பிரச்சனையை தீர்க்க வேண்டும்.வழக்கு நிதியாக ₹.11800/ வழங்கப்பட்டுள்ளது .
தோழர். S.சீனிவாசன் கி.பொருளாளர். திருநின்றவூர். கிளைமாநாடு மே மாதம் நடைபெறும். ஆவடியில் புதிய CGHS  w/c ஆரம்பிக்கப்பட்டது.
இன்று வரை  அது செயல்பட வில்லை.வழக்கு நிதி வழங்கப்படும். 
தோழர். K.முருகன்.கி.செயலர். வேளச்சேரி. கிளையின் வரவு செலவு கணக்கை வழங்கினார். பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நான்கு பகுதிகளாக ( East, West, North, & South) ஏற்படுத்தி பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும். அனைவரையும் ஒன்றினைத்து பேச்சுவார்த்தை நடத்துவது சிறப்பாக இருக்கும். வழக்கு நிதியாக ₹.ஒரு லட்சம் வழங்கப்படும்.
தோழர் J.பாண்டு ரங்கன்.கி.செயலர், அண்ணாநகர். எங்கள் கிளையின் செயல்பாட்டிற்கு எந்தவிதமான பொருளாதாரமும் இல்லை.ஒருசில தோழர்கள் வழங்கிய நன்கொடை மூலமாக கிளை செயல்படுகிறது. Society பிரச்சனையை தீர்க்க வேண்டும். வழக்கு நிதியாக ₹17,500/ வழங்கப்பட்டது. மே தின விழா அண்ணாநகர் பகுதியில் நடைபெரும்.அனைவரும்  வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தோழர் S.சாம்பசிவம்.கி.செயலர். கோடம்பாக்கம். கிளையின் செயல்பாடு கள் பற்றியும் வழக்கு நிதியாக ₹ .21,850/ வழங்கி கருத்துக்களை தெரிவித்தார். நந்தம்பாக்கம்,CGHS  W/C
பகுதியில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.
தோழர். T.S.விட்டோபன் அ.இ.பொருளாளர். நமது அமைப்பில் 
75000 + உறுப்பினர்கள் உள்ளார்கள்.தற்போது வட இந்தியாவில் இருந்து அதிகமான உறுபினர்கள் இணைந்து வருகிறார்கள். 20.09.2023  PB CAT  நீதி மன்ற தீர்ப்பில் அனைவருக்கும் பென்சன் மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது  DOT மேல்முறையீடு  செய்த காரணத்தினால் நாம்
மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வழக்கு நமக்கு சாதகமாக உள்ளது.
ஆகவே உறுபினர்களிடம்  ₹ 200/ வழக்கு நிதியாக கேட்டுள்ளோம். அதனை ஏற்று உறுப்பினர்கள் தாராளமாக வழக்கு நிதி வழங்கி வருகிறார்கள். வட இந்தியா மற்றும் பல்வேறு மாநிலங்களில் 
இருந்து தாராளமாக வழக்கு நிதி வந்துகொண்டிருக்கிறது
என்றார். இது வரையில் 54 லட்சம் ரூபாய்  வழக்கு நிதி வந்துள்ளது. வழக்கறிஞர் மற்றும் உதவியாளருக்கு ஒரு முறை வாதிட ₹.1,40000/ வழங்க வேண்டும் என்றார்.பென்சனர் பத்திரிக்கா List படி அனுப்பிவருகிறோம்.
தோழர் M.கண்ணப்பன். மா.பொருளாளர். 
2023 -2024 ஆண்டிற்கான  தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை  சமர்ப்பித்தார். நமது மாநில சங்கத்தின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு நகல் தோழர் T.S.விட்டோபன். அ.இ..பொருளாளரிடம் வழங்கப்பட்டது. கிளைகளின் உறுபினர்கள்.
1.அண்ணாநகர் 444.
2.மைலாப்பூர் 343.
3.காஞ்சிபுரம் 175.
4.செங்கல்பட்டு 463.
5.சைதாப்பேட்டை 234.
6.வேளச்சேரி 334.
7.கோடம்பாக்கம் 630.
8.கல்மண்டபம் 286.
9.பூந்தமல்லி 72.
10.திருத்தனி 129
11.மாதவரம் 294.
12.அம்பத்தூர் 263.
13.வில்லிவாக்கம் 901.
14.திருநின்றவூர் 327.
15.குரோம்பேட் 732.
இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
19.03.2024 அன்று நடைபெற்ற CGHS பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட தகவல்கள் தெரிவித்தார்.
தோழர். M.அரங்கநாதன்.அ.இ.துணைத் தலைவர் Society யில் பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு மாநில சங்கம் எடுத்த முயற்சியின் காரணமாக குறைதீர்க்கும் அதிகாரி ( Ombudsman )ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு மாநில சங்கம் உதவ வேண்டும் என்றார். ஆகவே Society யில் பாதிக்கப்பட்ட தோழர்கள் கிளைசெயலர்கள் மூலமாக மாநில சங்கத்திற்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மாநில சங்கம் சம்பந்தப்பட்ட குறைதீர்க்கும் அதிகாரிக்கு அனுப்பி பிரச்சனையை தீர்க்க வேண்டும். இந்த குறைதீர்க்கும் அமைப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தோழர். M.கோவிந்தராஜன். மா.உதவி.தலைவர். DOT  நிர்வாகம் மேல்முறையீடு சென்ற காரணத்தினால் வழக்கு நிதி பெறுகின்றோம்.
எந்தவிதமான நிதியாக இருந்தாலும் மாநில சங்கத்தின் மூலமாக மத்திய சங்கத்திற்கு செல்ல வேண்டும். 
கிளையின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.G -Pay மூலமாக வசூலித்தால் கணக்கு வழக்கு சரியாக வராது. G -Pay மூலம் வசூலிப்பது தவறு. குரோம்பேட் கிளை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழர். R.குணசேகரன். மா.உதவி. செயலர்
முன்பு நடந்த செயற்குழு முடிவுகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். வேறு கிளைகளுக்கு மாறிசெல்பவர்களை
நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.குரோம்பேட் கிளை செயல்படாத காரத்தினால் ஒரு சில தோழர்கள் வழங்கிய வழக்கு நிதி அகில சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் படி   ₹.12,000/.
அகில இந்திய சங்கத்திற்கு அனுப்பட்டுள்ளது. மாநில சங்கத்தின் முயற்சியால் உறுப்பினர்கள் அனுப்பிய விண்ணப்பங்களின் காரணமாக குறைதீர்ப்பு முறைவந்துள்ளது. குறைதீர்ப்பு என்பது நீதிமன்ற தீர்ப்பு போன்றது. ஆகவே பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு உதவவேண்டும். குரோம்பேட் கிளை செயலர் P.அர்சுனன்
ஏகமனதான தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றுவரை கிளைகூட்டத்தை நடத்தவில்லை. கிளை செயல்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது.கடந்த குரோம்பேட் கிளையின் செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற மோசமான ஒருசில தகவலை தெரிவித்தார்.
குரோம்பேட் கிளைசெயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழர். M.முனுசாமி மா.தலைவர். குரோம்பேட் கிளையின் பொதுகுழுவை கூட்டுவதற்கு கிளை செயலர் தோழர். P.அர்ஜுனனுக்கு மாநில சங்கம் கடிதம் கொடுக்க வேண்டும். 
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கிளை செயலாளர்கள்
தோழர் M.முனுசாமி. காஞ்சிபுரம்,  தோழர்.J.பாண்டுரங்கன் அண்ணாநகர் ஆகீயோர் கௌரவிக்கப்பட்டார்கள்.80 வயதை பூர்த்தி செய்த மூத்த தோழர் S.சாம்பசிவம் அவர்களும்,  பொன்மகள் விருது பெற்ற மூத்த தோழியர் S.அம்புஜவல்லி அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
அகில பொருளாளர் தோழர் T.S.விட்டோபன் அவரது சிறப்பான சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டார். நமது வெப் மாஸ்டர் தோழர் என் .மோகன் உடனுக்குடன் வாட்சப்பில் மற்றும் வெப் சைட்டில் செய்திகளை வெளியிட்டு வருகிறார் . அவரது  சேவைகளை பாராட்டி கௌரவிக்கப்பட்டது  
முடிவுகள். 
1) 7- வது மாநில மாநாட்டை முன்னிட்டு கிளைகள் தங்களின் கிளை மாநாட்டை 2024 டிசம்பர் மாதத்திற்குள் நடத்தவேண்டும்.
2) குரோம்பேட் கிளைகூட்டத்தை நடத்த கிளைசெயலருக்கு கடிதம் கொடுக்க வேண்டும்.ஒரு மாதத்திற்குள் நடத்தவில்லை என்றால் மாநில சங்கமே கிளை கூட்டத்தை நடத்தும்.
3) Society பாதிக்கப்பட்ட தோழர்கள் விண்ணப்பம் அனுப்ப படிவத்தை தோழர் R.குணசேகரன்  தயார் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பாதிக்கப்பட்ட தோழர்கள் கிளைசெயலர்கள் மூலமாக மாநில சங்கத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
தோழர் S.தங்கராஜ் நன்றி கூறி முடித்து வைத்தார்.
நன்றி.
S.தங்கராஜ். மா.செ.
சென்னை தொலபேசி .





Wednesday, 17 April 2024

Saturday, 6 April 2024

75000 plus – Another Mile Stone Achieved.

That's fantastic news! Crossing the milestone of

75,000 life memberships, with a current count of

75,008, is a remarkable achievement for our

 organization. It's a testament to the dedication

 and hard work of everyone involved, from the

 leadership to the members themselves.  This

 milestone can serve as inspiration for continued

 growth and success in the future.

ZINDABAD !   ZINDABAD !!  AIBSNLPWA ZINDABAD !!!.

 















Thursday, 4 April 2024

 CGHS - ABHA

The Addl. Secretary & Director General, Central Government Health Scheme, New Delhi is addressed for withdrawal of CGHS Order mandating linking of CGHS Beneficiary ID with Ayushman Bharat Health Account ID

PLEASE CLICK THE LINK GIVEN BELOW TO READ THE LETTER..

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...