Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : C. Olly 94449 78200, Circle Treasurer : R. Gunasekaran 94440 14950 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Friday, 31 December 2021
Friday, 24 December 2021
Tuesday, 21 December 2021
சென்னை தொலைபேசி மாநிலம் மற்றும் தமிழ்நாடு மாநில பென்ஷனர் நல சங்கங்கள் இணைந்து பென்ஷனர்தின சிறப்புக் கூட்டத்தை பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் 20-12-21 மாலை 3 மணிக்கு சிறப்பாக நடத்தின.
இணைந்த கூட்டத்திற்கு தமிழ்மாநில தலைவர் தோழர் ராமாராவும், சென்னை தொலைபேசி மாநிலம் தோழர் மூர்த்தியும் கூட்டு தலைமை தாங்கி நடத்தி தருமாறு சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் தங்கராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
தோழர் ராமராவ் அவரது உரையில் இன்று நடக்க உள்ள நிகழ்ச்சிகளையும், பேச இருக்கும் தலைவர்களையும் பற்றி கூறினார்.
இணைத்தலைவர் தோழர் மூர்த்தி தனது உரையில் பென்ஷன் ரிவிஷன் பற்றி பல்வேறு விஷயங்களை விளக்கிக் கூறினார்.
சென்னை தொலைபேசி பொருளாளர் தோழர் கண்ணப்பன் அனைவரையும் வரவற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அடுத்து தோழர் A. சுகுமாரன், அகில இந்தியத் துணைத்தலைவர், நகரா அவர்கள் பென்ஷன் ரிவிஷனாக்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற வரலாற்றை எடுத்துக் கூறினார்.
அடுத்து அகில இந்திய பொருளாளர் தோழர் விட்டோபன் பேசுகையில் பென்ஷன் பற்றி அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு வழக்குகள் பற்றியும், நகரா தொடர்ந்த வழக்கு விபரங்களையும் விரிவாக கூறினார்.
தோழர் G. நடராஜன், முன்னாள் அகில இந்திய செயலர், இன்னாள் அகில இந்திய துணைத் தலைவர், அவர்கள் அவரது உரையில் பென்ஷன் ரிவிஷனுக்காக DOT உடன் அவர் நடத்திய பேச்சு வார்த்தை விபரங்களை எடுத்துக் கூறினார்.
அடுத்து தமிழ் மாநில உதவி செயலரும், STR DNன் செயலருமான தோழர் S. சுந்தரகிருஷ்ணன் அவர்கள் தனது உரையில் VRSல் வந்த பென்ஷனர்களின் இன்கம்டாக்ஸ் பிரச்னைகளை தீர்ப்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றியும், மாற்றுத்திறனாளிகளை வாரிசுகளாக உள்ளவர்களின் பெயர்களை பென்ஷனர்களின் PPO வில் CO AUTHORISATION செய்ய CCA OFFICEல் அவர் எடுத்த நடவடிக்கை மூலம் 8 பேர்கள் பலன் அடைந்த விபரங்களையும் தெரிவித்தார். கொரோணா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய சென்னை தொலைபேசி தோழர் பாட்சா மற்றும் கொரோணாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உதவிய சென்னை தொலைபேசி ஓய்வூதியர் தோழர் மீரான் அவர்களின் மகன் தனியார் வங்கியில் பணிபுரியும் முகம்மது அலி ஜின்னா அவர்களின் சேவையையும் குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.
தோழர் முத்தியாலு பேசுகையில் மத்திய சங்கம் கூறியுள்ள 6 கட்டளைகளைப்பற்றி கூறினார். மத்திய சங்கம் இன்றைய கூட்த்தில் நிறைவேற்ற சொன்ன தீர்மாங்களை படித்து அவையின் ஒப்புதலைப் பெற்றார். பென்ஷன் ரிவிஷன் அனாமலியினால் நிலுவைத் தொகை பெற்ற தோழர்கள் மனமுவந்து நிறைய நன்கொடை அளிப்பதைப் பற்றி பாராட்டி பேசினார்.
இறுதியாக தோழர் D. கோபாலகிருஷ்ணன் பல்வேறு பிரச்னைகள் பற்றி மிக அருமையான ஒரு சொற்பொழிவு நத்தினார்.
1. 80 வருட ஆரம்பத்திலேயே 20% உயர்வு கொடுக்கப்படலாம் என்ற ஒரு கோர்ட்டின் ஆலோசனையை மத்திய அரசு நிராகரித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி விட்டது என்று தெளிவாக்கினார்.
2. 0% FITMENT மூலம் எந்த பலனும் வராது என்று ஆணித்தரமாக கூறினார். 100% சதவிகம் நிச்சயமாக அது வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.
3. PENSION REVISION ANOMALY பற்றி மிக விளக்கமாக நீண்ட ஒரு உரை ஆற்றினார். அதற்காக அவர் கடந்த 7 வருடங்களாக எடுத்த கடுமையான முயற்சிகளைப்பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். அதன் வெற்றியில் தான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறினார்.
4. பென்ஷன் ரிவிஷன் குறித்து பேசும்போது அதற்காக நாம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாக் தெரிவித்தார். அதில் 1.1.2017 முதல் 7வது சம்பளக் குழு பரிந்துரைப்படி நமக்கு பென்ஷன் ரிவிஷன் கொடுக்கப்பட வேண்டும் என்றும், BSNL ஊழியர்க்கு PAY REVISION செய்தால்தான் BSNL பென்ஷனர்களுக்கு பென்ஷன் ரிவிஷன் கொடுக்கப்படும் என்கிற நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதாக தெரிவித்தார். இதற்காக 40க்கும் மேற்பட்ட டாகுமென்ட்களை அத்துடன் இணைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் நிச்சயம் நாம் வெற்றி பெருவோம் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் சென்னை தொலைபேசியைச் சேர்ந்த 40க்கும் பேற்பட்ட பென்ஷர்கள் நமது சங்கத்தில் இணைந்தனர்.
இந்த கூட்டத்தில் பென்ஷன் அனாமலியில் நிலுவைத்தொகை பெற்ற சில தோழர்கள் நமது சங்கத்திற்கு நன்கொடைகளை வாரி வழங்கினர்.
இந்த கூட்டத்தில் STR DN கிளையின் தோழர் நரசிம்மன் மற்றும் தோழர் மோகனின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்தக் கூட்த்திற்கு 400க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை STR DN கிளையிலிருந்தும், சென்னை TRAFFIC DN கிளையிலிருந்த்தும் நிறைய தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு, காரம், காபி வழங்கப்பட்டது.தோழர் காளிதாசன் தமிழ்மாநில பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை தொலைபேசி மாநில தலைவர்களுக்கும், குறிப்பாக மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் அவர்களுக்கும் நமது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை தொலைபேசி மாநில சங்கத்தில் இன்று புதிதாக இணைந்தவர்கள்
Subscribe to:
Comments (Atom)
Life Certificate Valid up to 30-11-2025 list is posted below with a LINK to open it. Those whose names are found in it are requested to gi...
-
7th Chennai Telephone Circle Conference was held on 28-04-2025 and the following Circle Office bearers were elected unanimously . The list...
-
சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு .(FCPA) தமிழ்நாடு தோழர்களே , தமிழ்நாடு சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப...